தாமரைக் கோபுரம்
தாமரைக் கோபுரம் (Lotus Tower, சிங்களம்: නෙළුම් කුළුණ) என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும்,[1] மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது.[2][3] இது இலங்கையின் அடையாள குறியீடாக பிரதிபலிக்கிறது.[4] இக்கோபுரம் தற்போது (செப்டம்பர் 2019) தெற்காசியாவில் மிகவும் உயரமான சுயமாகத் தாங்கும் அமைப்பு ஆகும். அத்துடன், ஆசியாவில் 11-வது உயரமான கோபுரமும், உலகின் 19-வது உயரமான கோபுரமும் ஆகும்.[4] இக்கோபுரம் முதலில் கொழும்பின் புறநகரான பேலியகொடையில் கட்டப்படுவதாக இருந்தது, ஆனால் பின்னர் இலங்கை அரசு கொழும்பு நகரிற்கு இடத்தை மாற்றியது.[5] தாமரை-வடிவமுள்ள இக்கோபுரம், தொலைத்தொடர்பு, காணகம், மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கட்டி முடிப்பதற்கான $104.3 மில்லியன் செலவை சீனாவின் எக்சிம் வங்கி கடனாகக் கொடுத்துதவியது.[6] இக்கோபுரத்தை கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது. ஏழாண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த தாமரைக் கோபுரம் 2019 செப்டம்பர் 16 ஆம் நாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.[7][8][9] அமைவிடம்ஆரம்பத்தில் இக்கோபுரத்தை நிருவாகத் தலைநகர் கொழும்பின் புறநகர் ஒன்றில் அமைக்கவே திட்டமிடப்பட்டது. பின்னர் திட்டம் மாற்றப்பட்டு கொழும்பு நகர மத்தியில் பெய்ரா ஏரியை நோக்கிய பகுதியில் டி. ஆர். விஜயவர்தனா மாவத்தை வழியே தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டது.[10] கட்டுமானப் பணி2012 சனவரி 3 ஆம் நாள் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்டது.[11] 2012 சனவரி 20 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.[10] 2014 திசம்பரில், கோபுரம் 125 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. 2015 சூலையில் 255 மீட்டர் உயரத்தை எட்டியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia