தாயில்லாமல் நானில்லை

தாயில்லாமல் நானில்லை
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டபாணி
(தேவர் பிலிம்ஸ்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புஎம். ஜி. பாலுராவ்
கலையகம்தேவர் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1979
நீளம்4125 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயில்லாமல் நானில்லை (Thaayillamal Naanillai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்தார்.[1]

இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2] இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' மற்றும் இந்தியில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. கண்ணதாசன் மற்றும் வாலி அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "நடிகனின் காதலி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:56
2 "வடிவேலன் மனசு வச்சான்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 3:41
3 "வணக்கம் வணக்கம் (நவீன அல்லிதர்பார் நாடகம்)" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன் வாலி 5:48
4 "ஈனா மீனா" பி. சுசீலா வாலி 3:33
5 "பொடி வைக்கிறேன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:09

மேற்கோள்கள்

  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
  2. செல்வராஜ், என். (20 மார்ச் 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்". திண்ணை. Archived from the original on 29 மார்ச் 2017. Retrieved 10 அக்டோபர் 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya