டைப்பிஸ்ட் கோபு
கோபாலரத்னம் எனும் இயற்பெயரைக் கொண்ட டைப்பிஸ்ட் கோபு (இறப்பு: மார்ச் 6, 2019) 600 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர்.[1][4][5] நடிப்புத் தொழில்திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்னம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் சோ மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர். 1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1] 1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார். பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.[6] இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.[7] நடித்த சில திரைப்படங்கள்
தொலைக்காட்சித் தொடர்கள்
இறப்புடைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார்.[9] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia