தாராப்பூர்
தாராப்பூர் (Darappur) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள கல்யாணி உட்கோட்டத்தில் இடம்பெற்றுள்ள சக்தாகா காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். புவியியல் அமைப்புபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது[1]. 23.067° வடக்கு 88.652° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தாராப்பூர் நகரம் பரவியுள்ளது. மக்கள் தொகையியல்இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] தாராப்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 7,732 ஆகும் இம்மக்கள் தொகையில் 52% பேர் ஆண்கள் மற்றும் 48% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 58% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட குறைவாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 66 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 49 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 13% அளவில் உள்ளனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia