நதியா மாவட்டம்
![]() நதியா மாவட்டம் (Nadia district, வங்காள மொழி: নদিয়া জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக வங்காள தேசம் நாடு அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் கிருஷ்ணாநகர் ஆகும். மக்கட்தொகை2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 51,68,488 ஆகும்.[1] இது அமெரிக்காவின் கொலராடோ மாகாண மக்கட்தொகைக்குச் சமமாகும்.[2] மக்கட்தொகையின் அடிப்படையில் இது இந்தியாவின் 640 மாவட்டங்களில் 18 வது இடத்தில் உள்ளது.[1] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,316 பேர் ஆகும்.[1] மக்கட்தொகை பெருக்கம் 12.24 ஆகும்.[1] இம்மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் எனும் வீதத்தில் உள்ளனர்.[1] கல்வியறிவு 75.58% ஆகும்.[1] வனவிலங்குகள் காப்பகம்இம்மாவட்டத்தில் பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம் அமைந்துள்ளது. இக்காப்பகத்தின் பரப்பளவு 0.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[3] வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia