திகம்கர்
திகம்கர் (Tikamgarh), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த திகம்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். மாநிலத் தலைநகரான போபால் நகரத்திற்கு வடகிழக்கே 267 கிலோ மீட்டர் தொலைவில் திகம்கர் உள்ளது. 1947 ஆண்டிற்கு முன்னர் திகம்கர் மாவட்டம், ஓர்ச்சா சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 வார்டுகளும், 14,587 குடியிருப்புகளும் கொண்ட திகம்கர் நகரத்தின் மக்கள் தொகை 79,106 ஆகும். அதில் 41,399 ஆண்கள் மற்றும் 37,707 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.85 % உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 911 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.02 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 14.89 % மற்றும் 1.80 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 69.95%, இசுலாமியர் 20.87%, சமணர்கள் 8.77% மற்றும் பிற சமயத்தினர் 0.41% வீதம் உள்ளனர். [2] போக்குவரத்துதிகம்கர் தொடருந்து நிலையம் நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.[3] தட்ப வெப்பம்
படக்காட்சியகம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia