திகம்கர் மாவட்டம்
திகம்கர் மாவட்டம் அல்லது டிக்கம்கர் மாவட்டம் (Tikamgarh district) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் திகம்கர் ஆகும். இது சாகர் கோட்டத்தில் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைக்கு முன்னர் இம்மாவட்டம் ஓர்ச்சா சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. இம்மாவட்டத்தின் நிவாரி, ஓர்ச்சா மற்றும் பிரித்திவிபூர் என 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு 52-வது புதிய நிவாரி மாவட்டம் 1 அக்டோபர் 2018 அன்று நிறுவப்பட்டது.[1][2][3] பொருளாதாரம்பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் செஹோர் மாவட்டமும் ஒன்றாக இந்திய அரசால் 2006- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.[4] மாவட்ட நிர்வாகம்டிக்கம்கர் மாவட்டம் மூன்று உட்கோட்டங்களாகவும்; டிக்கம்கர், பல்தேவ்கர், நிவாரி, பிரிதிவிபூர், ஜாதரா, ஓர்ச்சா, லித்தோரக்காஸ், கர்க்காபூர் மற்றும் பலேரா என ஒன்பது வருவாய் வட்டங்களைக் கொண்டது. மேலும் ஊரக வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த டிக்கம்கர், பல்தேவ்கர், ஜாதரா, பலேரா, நிவாரி மற்றும் பிரிதிவிபூர் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது. அரசியல்டிக்கம்கர் மாவட்டம் டிக்கம்கர், பிரிதிவிபூர், ஜாதரா, கர்காபூர், நிவாரி என ஐந்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இவ்வைந்து சட்டமன்ற தொகுதிகளும் டிக்கம்கர் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது. மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,445,166 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 82.71% மக்களும்; நகரப்புறங்களில் 17.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.13% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 760,355 ஆண்களும் மற்றும் 684,811 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 5,048 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 901 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 61.43% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.77% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 49.97% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 227,564 ஆக உள்ளது. [5] சமயம்இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,383,475 (95.73 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 44,143 (3.05 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது. மொழிகள்மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. மாவட்ட எல்லைகள்இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia