திதி (புராணம்)
திதி (ஆங்கிலம்: Diti); (சமக்கிருதம்: दिति) இந்து தொன்மவியல் படி, அரக்கர்களின் தாய் ஆவார். தட்சப்பிரசாபதியின் அறுபது மகள்களில் ஒருத்தி. பிரம்மாவின் பேத்தி. காசியபர் முனிவரின் பதிமூன்று மனைவிகளில் ஒருத்தி. தன் உடன் பிறந்தவளான அதிதியை வெறுப்பவள். உருத்திரன், மருத்துக்கள் மற்றும் தைத்தியர்கள் மற்றும் அதர்மத்தைப் பின்பற்றும் பல அரக்கர் குலங்களை உருவாக்கிய தாய். அதிதியின் குழந்தைகளான இந்திரன் முதலான தேவர்களை வெறுப்பவள். அதிதியின் மகனான இந்திரனைவிட பலமிக்க குழந்தையை தன் கணவன் காசியப முனிவரிடம் வேண்டினாள்.[1] காசியபரின் அருள்படி, விஷ்ணுவின் வைகுண்டத்தை காவல் புரியும் ஜெயன்-விஜயன் எனும் இருவர் தங்களின் அகந்தை காரணமாக, சனகாதி முனிவர்களை வைகுண்டம் செல்ல அனுமதி மறுத்த காரணத்தால், முனிவர்களின் சாபப்படி அசுரர் குலத்தில், திதிக்கு இந்திரனை விட பலமிக்க இரு மகன்களாக இரணியாட்சன் மற்றும் இரணியன் போன்ற தைத்தியர்களாகப் பிறந்தனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கூடுதல் வாசிப்பிற்கு
|
Portal di Ensiklopedia Dunia