சனகாதி முனிவர்கள்
![]()
சனகாதி முனிவர்கள் அல்லது பிரம்ம குமாரர்கள் (Four Kumaras) என்பவர்கள் பூவியில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக, பிரம்மாவின் மனதால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகள் ஆவர். ஆனால் தங்களை படைத்த பிரம்மாவின் விருப்பத்தை மீறி, இக்குமாரர்கள், இல்லற வாழ்வில் புகாது, பிரம்மச்சர்ய ஆசிரம வாழ்வை மேற்கொண்டு அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பி வந்தனர் என இந்து சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வாயிலாக அறிய முடிகிறது.[1][2] பொதுவாக சனகாதி முனிவர்கள், சனகர், சனாநந்தர், சனத்குமாரர் மற்றும் சனாதனர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள். சைவ சமயத்தில்யோக நிலையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியிடம், சனகாதி முனிவர்கள், ஆத்ம வித்தை மெளனமாக அறிந்தவர்கள். உபநிடதம் மற்றும் மகாபாரத்தில் சனத்குமாரர்சாந்தோக்கிய உபநிடதத்தில், பிரம்மத்தை அறிய பூமா வித்தியாவை அருளியதன் மூலம், பிரம்ம தத்துவத்தை, சனத்குமாரர் எல்லாம் அறிந்த நாரதருக்கு புகட்டினார். மகாபாரத இதிகாசத்தில், விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க, உத்யோக பருவத்தில், அத்தினாபுர மன்னன் திருதராஷ்டிரனுக்கு மரணமில்லா பெரு வாழ்வு குறித்தான ஆத்ம வித்தையை சனத்குமாரர் அருளினார். சனத்குமாரரின் இந்த அருளரைகளை சனத்சுஜாதீயம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மகாபாரத்தின் சாந்தி பருவத்தில், சுக்கிரன் மற்றும் விருத்திராசூரன் ஆகியவர்களுக்கு பிரம்ம வித்தையை அருளியதாக தகவல் உள்ளது. பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றில் சனகாதி முனிவர்கள், விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. காட்சிகள்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia