திபேந்து அதிகாரி
திபேந்து அதிகாரி (Dibyendu Adhikari) (பிறப்பு: 24 டிசம்பர் 1976) மேற்கு வங்காளத்தின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், கந்தி தட்சின் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2016 முடியவும், மற்றும் 2016-இல் தம்லக் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வென்று, இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1].[2] இவரது அண்ணன் சுவேந்து அதிகாரி 2016-இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் சார்பாக நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கொண்ட கருந்து வேறுபாடு காரணமாக, சுவேந்து அதிகாரி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு, திபேந்து அதிகாரியும், அவர்களின் தந்தையும், முன்னாள நாடாளுமன்ற மக்கள்வை உறுப்பினருமான சிசிர் அதிகாரியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.[4] .[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia