சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari)[4] இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காள அரசில் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சராகவும், இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். [5][6] நந்திகிராம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வேதியியல் தொழிற்சாலையை நிறுவுவதற்கு விளைநிலங்களை கையகப்படுத்த முயன்ற புத்த தேவ் பட்டாச்சாரியா தலைமையிலான மேற்கு வங்க இடதுசாரி அரசின் முயற்சிகளை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி, அத்திட்டத்தை நிறுத்தியதில் புகழ்பெற்றவர்.[7]இவர் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர். சுவேந்து அதிகாரி, 2009-இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பாக தம்லக் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்டு) கட்சியின் வேட்பாளர் லெட்சுமன் சந்திர சேத்தை 1,72,958 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[9]இவர் 19 டிசம்பர் 2020-இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் இவர் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக 12 மார்ச் 2021 அன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.[10][11] இவரது தந்தை சிர்சார் அதிகாரி மற்றும் இளைய சகோதரர் திபேந்து அதிகாரி மேற்கு வங்க அரசியல்வாதிகள் ஆவார். தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia