தியூட்டிரியம்
தியூட்டிரியம் அல்லது டியூட்டிரியம் (Deuterium) என்பது ஐதரசனின் ஓரிடத்தான்களும் (ஐசோடோப்புகளுள்) ஒன்றாகும். தியூட்டிரிய உட்கருவில் ஒரு நேர்மின்னியும் ஒரு நொதுமியும் (நியூட்ரானும்) உள்ளன. அணுக்கருவுள் இரண்டு துகள்கள் உள்ளதால் தியூட்டிரியம் எனப் பெயர் பெற்றது. கிரேக்க மொழியில் "டியூட்டெரோசு" (deuteros) என்றால் "இரண்டாவது" என்று பொருள். தியூட்டிரியத்தின் வேதியியல் குறியீடு 2H என்பதாகும். எனினும் D எனும் குறியீடும் இதைக்குறிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் இது நீரியம்-2 என்றும் அழைக்கப்படும். தியூட்டிரியத்தை அரால்டு உரே (Harold Urey) 1931 இல் கண்டுபிடித்துப் பெயர் சூட்டினார். இவருக்கு 1934 இல் வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. தியூட்டிரியம் இயற்கையில் கடலில் காணப்படுகின்றது. ஏறத்தாழ 6,420 ஐதரசன் அணுக்களில் ஒன்று தியூட்டிரியம் ஓரிடத்தானாக உள்ளது (அணுக்கள் நோக்கில் மில்லியன் பகுதிகளில் ~156.25 பகுதியாக (ppm) உள்ளது எனலாம்). புவியில் 0.0156 விழுக்காடு இந்த தியூட்டிரியமாக உள்ளது. நிறை அளவில் 0.0312% தியூட்டிரியம். விண்மீன்களின் உள்நடுவே தியூட்டிரியம் உருவாவதை விட விரைவாக அழியும் ஆகையாலும் மற்ற முறைகளில் விளையும் அளவு மிகவும் குறைவானதாலும், இப்பொழுது இருக்கும் தியூட்டிரியத்தின் அளவு, பெரு வெடிப்பு என்னும் நிகழ்ச்சி ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றைய பொழுது உண்டானவை என்று கருதுகின்றார்கள். வால்வெள்ளி என்னும் விண்பொருள்களிலும் புவியில் காணப்படுவது போன்றே ஏறத்தாழ மில்லியன் பங்கில் 156 பங்கே கொண்டுள்ளதாக கணக்கிட்டுள்ளனர். இதனால் புவியின் கடலில் உள்ள நீர் கூட இப்படியான வால்வெள்ளி மோதலில் உருவானதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்[3] [4] தியூட்டிரியம் இரு ஆக்சிசன் மூலக்கூறுகளுடன் சேர்ந்து கனநீர் உண்டாகிறது. கன நீர் அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia