தியோல்
தியோல் (Deool, பொருள்: கோயில் ) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான இந்திய மராத்திய மொழி கருப்பு நகைச்சுவைப் படம் ஆகும். உமேஷ் விநாயக் குல்கர்னி இயக்கிய இப்படத்தை அபிஜித் கோலாப் தயாரித்துள்ளார். இந்த படத்தில் கிரிஷ் குல்கர்னி, நானா படேகர், திலீப் பிரபவால்கர், ஷர்வாணி பிள்ளை, சோனாலி குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படமானது உலகமயமாக்கலால் இந்தியாவின் சிறு நகரங்கள், கிராமங்களில் ஏற்படும் கொடூரமான பாதிப்புகள் மற்றும் அரசியல் பின்னணியால் ஏற்படும் விளைவுகள் பற்றிய படம் ஆகும். தியோல் படமானது 59 வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த திரைப்படம்,[1] சிறந்த நடிகர் ( கிரிஷ் குல்கர்னி ), சிறந்த உரையாடல் (கிரிஷ் குல்கர்னி) போன்ற விருதுகளைப் பெற்றது.[2] இந்த திரைப்படத்தின் வழியாக மராத்தித் திரைப்படத் துறையில் மூத்த இந்தித் திரைப்பட நடிகர் நசிருதீன் ஷா அறிமுகமானார்.[3] கதைமகாராட்டிரத்தின் ஒரு அமைதியான கிராமமாக மங்ருல் உள்ளது. ஊரில் உள்ள கேஷ்யா (கிரிஷ் குல்கர்னி), ஒரு எளிய கிராம இளைஞன். அவன் பாவ் கலண்டே (நானா படேகர்) என்பவரிடம் கால்நடைகளை மேய்ப்பவராக வேலை செய்கிறான். பாவின் மாடுகளில் ஒன்றான "கார்டி" என்ற மாட்டை மேய்க்க கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு மலைக்கு செல்கிறான். மாட்டை மேயவிட்டு ஒரு அத்திமரத்தினடியில் இளைப்பாறுகிறான். அப்போது அவனது கனவில் கடவுள் தத்தாத்ரேயா பிரசன்னமாகி தனது அவதாரத்தை கேஷ்யாவுக்கு காட்டுகிறார். அதைப்பறி கேஷ்யா கிராமம் முழுவதும் சொல்கிறான். ஒரு பத்திரிகையாளர் (கிஷோர் கதம்) மங்கருவில் தத்தாத்ரேயர் தோன்றிய செய்தியை பரபரப்பாக வெளியிடுகிறார். இந்நிலையில் கேஷ்யா தத்தாத்ரேயரை பார்த்த இடத்தில் கோயில் கட்ட கிராம மக்கள் விரும்புகின்றனர். இது ஊரில் மதிப்புக்குரியவராக இருக்கும் அன்னாவை இது கலக்கமடையச் செய்கிறது. அவர் கிராமத்தில் ஒரு மருத்துவமனையை கட்ட வேண்டும் என்ற விரும்புகிறார். ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நிதியை சிறந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். அடுத்து வரும் தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிட விரும்பும் கலண்டே ஊரை பகைத்துக்கொள்ள விரும்பாமல் கோயில் கட்ட சம்மதிக்கிறார். கோவிலும் கட்டப்படுகிறது. பின்னர் கிராமம் மெதுவாக ஒரு புனித தலமாக மாறுகிறது. வணிகமயமாக்கல் காரணமாக மங்ருல் கிராமம் தலைகீழாக மாறுகிறது. ஆனால் இதை அண்ணாவைத் தவிர வேறு யாரும் குறை கூறவில்லை. கடவுளை வைத்து ஏமாற்றுபவர்கள் உருவாகின்றனர். ஊர் மக்களும் மாறுகின்றனர. ஒவ்வொரு கிராமத்துக்கும் வணிகரீதியாக முன்னேற உரிமை உண்டு. ஆனால் ஒரு கோவிலைப் பயன்படுத்தி அதில் நன்மையை அடைவது எந்த அளவு நெறிமுறை? என சிந்திக்கத் தூண்டுகிறது. நடிப்பு
விருந்தினர் தோற்றத்தில்
வெளியீடுதியோல் 2011 செப்டம்பர் 23 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டது.[4] இது பூசன் சர்வதேச திரைப்பட விழா, நியூயார்க்கின் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழா, அபுதாபி சர்வதேச திரைப்பட விழா, மும்பையில் எம்.ஏ.எம்.ஐ [5] போன்றவற்றில் திரையிடப்பட்டது. மேலும் இது 2011 நவம்பர் 4 அன்று நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. இசைதியோலுக்கு மங்கேஷ் தகடே இசையமைத்தார். பாடல் வரிகளை ஸ்வானந்த் கிர்கிரே, சுதிர் மோகே ஆகியோர் எழுதினர். வரவேற்பும், விருதுகளும்தியோல் படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. டெய்லி நியூஸ் & அனாலிசிஸ் (டிஎன்ஏ) படத்திற்கு 5 நட்சத்திரங்களில் 4 நட்சத்திர மதிப்பீட்டை அளித்தது. அது படம் குறித்து " இது ஓர் இந்திய மொழி திரைப்படம் என்பது பெருமைக்குரியது. கடவுளின் பொருட்டு, இதை தவறவிடாதீர்கள். " என்றது. இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டில் 59 வது தேசிய திரைப்பட விருதுகளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான விருதுகளை (3) வென்றது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia