சோனாலி குல்கர்னி
சோனாலி குல்கர்னி (Sonali Kulkarni) பிறப்பு : நவம்பர் 3, 1973) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் கன்னடம், குஜராத்தி, மராத்திய மொழி, இந்தி, மற்றும் தமிழ் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தோஹி, தியோல், தில் சக்தா, சிங்கம், டேக்சி நம்பர் 9211 ஆகியத் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். 1994 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த மே மாதம் திரைப்படத்தில் சந்தியா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தொழில் வாழ்க்கைசோனாலி குல்கர்னியின் முதல் திரைப்படம் கன்னட மொழியில் வெளிவந்த செலுவி எனும் திரைப்படம் ஆகும். இதனை கிரிஷ் கர்னாட் இயக்கினார். இவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த இத்தாலி மொழித் திரைப்படமான ஃபுகோ சு தி மீ எனும் திரைப்படத்திற்காக 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் விருது பெற்றார். 2002 ஆம் ஆண்டின் தேசிய விருது பெற்றார். சைத்ரா எனும் குறும்படத்தில் நடித்ததற்காக நடுவர்களின் சிறப்பு விருதைப் பெற்றார்.[1] லோக்சதா எனும் மராத்திய பத்திரிகையில் பதிப்பசிரியராக சூன் 2015 முதல் மே 2017 வரை பணிபுரிந்தார். பேரமைதி எனும் பகுதில் வாரம் ஒருமுறை எழுதிவந்தார். அந்தப் பகுதிகள் அனைத்தையும் அதே பெயரில் ராஜஹன்சா பிரகாசன் என்பவர் தொகுத்து நூலாக வெளியிட்டார்.[2] இந்த நூலை நானா படேகர் வெளியிட்டார். பின் சோனாலியின் எழுத்துக்களைப் படிக்கும் போது அவர் முழுமையாக என்னை தன்னுடைய எழுத்துக்களால் ஆட்கொள்கிறார். இவரின் படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் சிறப்பாக உள்ளது என நானா படேகர் தெரிவித்துள்ளார். சொந்த வாழ்க்கைசோனாலி குல்கர்னி நவம்பர் 3, 1974 இல் புனே, மகாராட்டிரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர் ஆவார். சோனாலிக்கு சந்தீப் மற்றும் சந்தேஷ் எனும் இரு சகோதரர்கள் உள்ளனர். சந்தேஷ் திரைப்பட இயக்குநராக உள்ளார். அபினயா வித்யாலயா பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பெர்கூசன் கல்லூரில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். பின் மராத்திய இலக்கியம் பயில்வதற்கான உதவித் தொகையைப் பெற்றார். சோனாலி குல்கர்னி , சந்திரகாந்த் குல்கர்னி எனும் எழுத்தாளரைத் திருமணம் செய்தார். பின் இருவரும் திருமண முறிவு பெற்றனர். பின் மே 24, 2010 இல் நசிகத் பன்ட்வைத்யா என்பவரைத் திருமணம் செய்தார். இவர் தற்போது சோனி பொழுதுபோக்குத் தொலைக்காட்சியின் இயக்குநராக உள்ளார்.[3] இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. முதல் திரைப்படம்சோனாலி குல்கர்னியின் முதல் திரைப்படம் செலுவி எனும் கன்னடத் திரைப்படம் ஆகும். இது கருநாடக நாட்டார் கதையினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதனை கிரிஷ் கர்னாட் இயக்கினார். இது இந்திய சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பை பிரதிபலிக்கும் விதத்தில் இருந்தது. தங்களது துயரங்களைப் பொருட்படுத்தாது , எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி சேவை செய்யும் விதமாக கதையை வடிவமைதிருப்பார். மேலும் காடழிப்பு பற்றிய விழிப்புணர்வுப் படமாகவும் அமைந்திருக்கும். கான் திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. விருதுகள்வென்றவை2002 ஆம் ஆண்டில் தேசிய விருது (நடுவர் சிறப்பு விருது) சைத்ரா எனும் குறும்படத்திற்காகப் பெற்றார். 1996 இல் தோஹி திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றார். 2015 இல் சிறந்த மராத்திய நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். பரிந்துரைக்கப்பட்டவை2001 பிலிம்பேர் விருதுகளில் மிஷன் காஷ்மீர் திரைப்படத்திற்காக சிறந்த பெண் துணை நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. இதே திரைப்படத்திற்காக அதே ஆண்டில் ஸ்கிரீன் வீக்லி விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia