திருக்குடும்பப் பரிகாரக் கோயிலும் பசிலிக்காவும்
திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம் (சக்ராடா பமீலியா, Basílica i Temple Expiatori de la Sagrada Família) என்பது எசுப்பானியாவின், காத்தலோனியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே பார்சிலோனாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கத்தோலிக்க ஆலயம் ஆகும். காத்தலன் கட்டிட வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினால் (1852–1926) இவ்வாலயம் வடிவமைக்கப்பட்டது. இது கட்டிமுடிக்கப்படும் முன்னரே இதனை யுனெஸ்கோ, உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது.[3] இப்பேராலயம் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்கால் இளம் பேராளயமாக நேர்ந்தளிக்கப்பட்டது.[4][5][6] இது எசுப்பானியாவின் பன்னிரெண்டு புதையல்களில் ஒன்றாகும். கோடி தன்னுடைய இறப்புவரை இவ்வாலயத்திற்காகவே தன்னுடைய நேரங்களைச் செலவிட்டார், எனினும் அவரது இறந்த ஆண்டான 1926 ஆம் ஆண்டன்று ஆலயத்தின் காற்பங்கு கூட கட்டி முடிக்கப்படவில்லை.[7] கோடியின் இறப்புக்குப் பின் பேராலயத்தின் கட்டுமானப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்தன. எசுப்பானிய உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 1950 ஆம் ஆண்டுகளில் மீண்டும் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2010 ஆண்டு வரை பாதிக்கும் மேலாக கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு நேர்ந்தளிக்கப்பட்டது, எனினும் கோடியின் நூற்றாண்டு நினைவு தினமன்றே அதாவது 2026 ஆம் ஆண்டிலேயே இது முழுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தொகுப்பு
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia