திருக்கோட்டியூர்
இவ்வூரின் சிறப்புஇங்கு பிரசித்திபெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் வரிசையில் இத்தலமும் இடம்பெற்றுள்ளது. பெயர்க்காரணம்முக்கடவுளரும், தேவர்களும், ரிஷிகளும் கூடி ஹிரண்யகசிபுவைக் கொல்லும் உபாயத்தைக் கண்டறிந்த இடமாக இத்தலம் கருதப்படுகிறது. கோஷ்டி (கூட்டம்) சேர்ந்த இடமாக அமைந்தமையால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என அழைக்கப் பெற்றது. கூட்டத்தின் முடிவின்படி, மஹாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து ஹிரண்யகசிபுவை அழித்தார். ஸ்ரீ சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோவில்இங்கு அமைந்த திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் நான்கு புறமும் பெருமதில்கள் சூழ்ந்த, உயர்ந்த இராஜகோபுரத்தோடமைந்த பெருங்கோவிலாகும். பெருமாளின் நின்ற, நடந்த, இருந்த முக்கோலங்களும் அமைந்துள்ளது இக்கோவிலின் சிறப்பாகும். இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia