திருநாவலூர்திருநாவலூர், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருநாவலூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இது உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு புகழ் பெற்ற திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில் உள்ளது. சுந்தரர் திருமணம் இங்கு நிகழ இருந்த போது சிவன் தடுத்தாட்கொண்டதாக வரலாறு உள்ளது. பெயர்பழங்காலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்ததால் நாவலூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சு வழக்கில் திருநாம நல்லூர் என்னும் பெயரே பெருவாரியாக புழங்குகிறது.[1] வரலாறுஒரு காலத்தில் முனையரையர் மரபு மன்னர்களின் தலைநகராயிருந்ததது இந்த ஊர் ஆகும். சைவ உலகில் திருநாவலூர் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் நால்வர் பிறந்து வாழ்ந்த ஊர் திருநாவலூர். அந் நால்வர்: சுந்தரமூர்த்தி நாயனார், சுந்தரரின் தந்தை சடைய நாயனார், தாய் இசை ஞானியார், சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் அப் பகுதியை ஆண்டவருமாகிய நரசிங்க முனையரைய நாயனார் என்பவராவர். [1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia