திருநாவாய் நவ முகுந்தன் கோயில்
திருநாவாய் நவ முகுந்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது.[1][2] இறைவன் நவமுகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில்[1] வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.[3] இறைவி: மலர்மங்கை நாச்சியார். விமானம் வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921-ல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.[4] இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.[5] திருமங்கையாழ்வாரால் இரண்டு பாசுரங்களும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களும் பாடல் பெற்ற தலம் இதுவாகும். ![]() பித்ரு க்ஷேத்திரம்துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர்.[6] ஓவியங்கள்பழைமையான பல ஓவியங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன அமைவிடம்சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டிலிருந்தும் திருநாவாய் செல்ல பேருந்துகள் உள்ளன. பாசுரம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia