திருமங்கலம் மெற்றோ நிலையம்
திருமங்கலம் மெற்றோ நிலையம் (Thirumangalam metro station) என்பது சென்னை மெட்ரோ ரயில் பாதை 2இல் உள்ள ஒரு மெற்றோ நிலையம் ஆகும். இது அண்ணாநகர் வழியாக சென்னை மெற்றோவின் இரண்டாம் வழித்தடத்தில் வரும் நிலத்தடி நிலையமாகும். ஒரு காலத்தில் பழைய திருமங்கலம் கிராமம் இருந்த பகுதிகளுக்கும், தற்போது திருமங்கலம் மேம்பாலம் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கின்றது. கட்டுமான வரலாறுகன்சோலிடேட்டட் கன்ஸ்ட்ரக்டட் கன்சார்டியம் (சிசிசிஎல்) எனும் கட்டுமான நிறுவனம் மூலம் இந்த நிலையம் கட்டப்பட்டது. இந்த நிலையம் மே 14, 2017 அன்று திறந்து வைக்கப்பட்டது.[2] நிலையம்கோயம்பேடு அருகே நிலத்தடி ரயில் நிலையமாக இந்த நிலையம் கட்டப்பட்டது. இந்த நிலையம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 23,000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. நிலையத்தில் நான்கு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் உள்ளன.[3] போக்குவரத்துதிசம்பர் 2019 நிலவரப்படி, இந்த நிலையத்தில் சுமார் 10,000 பயணிகள் ரயில்களில் பயணித்துள்ளனர். இது சென்னையின் மிகவும் பரபரப்பான மெற்றோ நிலையமாக மாறியுள்ளது.[1] நிலைய அமைப்பு
இணைப்புகள்நுழைவு/வெளியேறுநான்கு நுழைவாயில்கள் உள்ளன. அனைத்தும் இரண்டாவது நிழற்சாலையில் உள்ளன. விமான நிலையம் அல்லது கோயம்பேடு நோக்கிப் பயணிக்கும்போது இடதுபுறத்தில் உள்ள வெளியேறும் வழிகயாகத் திருமங்கலம், முகப்பேர், பாடி, கோயம்பேடு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு மிகவும் பொருத்தமானது. மேலும், லலிதா மற்றும் ஜிஆர்டி நகைக்கடைகள் இந்தப் பக்கத்தில் தான் உள்ளன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia