திருமண அழைப்பிதழ்![]() திருமண அழைப்பிதழ் அல்லது திருமண பத்திரிக்கை என்பது ஒரு வகையான அழைப்பிதழாகும். திருமணத்திற்கு வருகைபுரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கும் அழைப்புக் கடிதம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினராலும் கடைபிடிக்கக் கூடிய ஒரு திருமணச் சடங்காக அழைப்பிதழ் வழங்குவது நடைபெறுகிறது. கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு உடைய இறைமறுப்பு செய்பவர்களும் கூட இவ்வாறான திருமண அழைப்பிதழ்களை வழங்குகின்றனர். தாம்பூலம்திருமண அழைப்பிதழ் வழங்கும் பொழுது, வெறும் அழைப்பிதழ் மட்டுமில்லாமல், வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமம் உள்ளிட்டவைகளையும் வழங்கும் பழக்கம் சில இனத்தவர்களிடம் இருக்கிறது. சில நேரங்களில் நாணயம் ஒன்றையும் இதனுடன் இணைத்து வழங்கும் பழக்கமும் உள்ளது. அழைப்பிதழ் வடிவமைப்புஅழைப்பிதழ்களில் இறைவனுடைய படம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இறைமறுப்பு தெரிவிப்பவர்கள் ஈ. வெ. இராமசாமி உள்ளிட்ட இறைமறுப்பு தெரிவிப்பவர்களின் படம் இட்டிருப்பார்கள். இதுமட்டுமின்றி தங்களுக்கு பிடித்த தலைவர்களின் படிமங்களையும் அழைப்பிதழில் இணைப்பது அண்மைக்காலங்களில் அதிகரித்து உள்ளது. ![]() அழைப்பிதழ் குறிப்புகள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia