திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல் அல்லது திருமுல்லைவாயல் (Thirumullaivoyal) தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின், ஆவடி வட்டத்தில் அமைந்துள்ள 5 உள்வட்டங்களில் ஒன்றாகும். மேலும் திருமுல்லைவாசல் ஆவடி மாநகராட்சியில் உள்ளது.[1] சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில், திருமுல்லைவாசல் தொடருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. அமைவிடம்பெருநகர சென்னை மாநகராட்சியின் வலாயத்தில் திருமுல்லைவாசல் விரைவாக வளரும் நகரப் பகுதியாக மாறிவருகிறது. மேற்கு சென்னையின் ஒரு பகுதியாக உள்ள திருமுல்லைவாசலுக்கு தென்கிழக்கில் 2 கி.மீ. தொலைவில் அம்பத்தூர் நகராட்சியும், தென்மேற்கில் ஆவடி நகராட்சியும் உள்ளது. போக்குவரத்துசென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை - அரக்கோணம் வழியாகச் செல்லும் சென்னை புறநகர் இருப்புவழிகள், திருமுல்லைவாசல் தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது. மேற்கோள்கள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia