அரக்கோணம்
அரக்கோணம் (Arakonam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் வட்டம் மற்றும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். இங்கு அரக்கோணம் சந்திப்பு நிலையம் உள்ளது. அரக்கோணம் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மக்கள் வகைப்பாடு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,507 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 78,395 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,727 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 21,245 மற்றும் 870 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.22%, இசுலாமியர்கள் 9.83%, கிறித்தவர்கள் 7.95%, தமிழ்ச் சமணர்கள் 0.35%, மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[3] சிறப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia