திருவாலங்காடு ( நாகப்பட்டினம்)
'திருவாலங்காடு' காவிரி ஆற்றின் தென்கரையில், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் அமைந்திருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் இவ்வூர் அமைந்திருக்கிறது. திருவாலங்காட்டில் பிரசித்திப் பெற்ற வட ஆரண்யேசுவரர் சிவன் கோயில் அமைந்திருக்கிறது. அம்மன் பெயர் வண்டார் குழலி. இங்கு காவிரி ஆற்றிலிருந்து 'விக்கிரமனாறு' என்ற புதிய கிளை ஆறு பிரிகிறது. இங்கு காவிரி ஆற்றின் கரையில்தான், அப்பைய தீக்ஷிதரின் அதிஷ்டானம் இருக்கிறது. திருவாலங்காட்டில் மாரியம்மன் கோவில், காளி கோயில், கன்னியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் இருக்கின்றனர். நிருவாகத் தகவல்மாவட்டம்: மயிலாடுதுறை திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும்.[5] அமைவிடம்இந்த ஊர் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[6] அண்மையிலுள்ள நகரங்கள்மயிலாடுதுறை, கும்பகோணம் குத்தாலம், ஆடுதுறை, திருவாவடுதுறை, கோவிந்தபுரம், திருவிடைமருதூர், திருபுவனம். மேற்கோள்கள்
இவற்றையும் காண்கதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் திருவாலங்கடு காவிரி ஆற்றை பற்றிய இந்த சிறு வீடியோவையும் பாருங்கள். https://www.youtube.com/watch?v=GBgoEjr4RgU மேலும் விரிவான தகவலுக்கு இந்த வலைத்தளத்தை பார்க்கவும்: http://thiruvalangadu.blogspot.in/ |
Portal di Ensiklopedia Dunia