திரு. வி. க. சாலை

திரு. வி. க. சாலை (general parts road) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு சாலையாகும். இது முன்பு ஜெனரல் பாட்டர்ஸ் சாலை என அழைக்கப்பட்டது. இந்த சாலை அண்ணா சாலையிலிருந்து பிரிந்து சென்னை எல்.ஐ.சி.க்குப் பின்புறம் செல்கிறது. இந்த சாலையில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் சிறு வணிகர்களின் கடைகள் கொண்ட இடமாக இருந்ததால் இது ஜெனரல் பாட்டர்ஸ் சாலை என அழைக்கப்பட்டது.

இந்த சாலையில் ஜெயப்பிரதா தியேட்டர், மெலோடி தியேட்டர் போன்ற திரையரங்குகள் இருந்தன. தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் இந்தச் சாலையில்தான் உள்ளது. அண்ணா சாலையில் இருந்து திருவிக சாலை தொடங்கும் இடத்தில் புகாரி ஓட்டல் போன்ற சென்னையின் பாரம்பரியமிக்க உணவகங்கள் உள்ளன. இந்தச் சாலை முடியும் இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யு வணிகக்கூடம் உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. முகமது ஹுசைன் (6 சூலை 2018). "கார்களை அலங்கரிக்கும் சாலை". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 8 சூலை 2018.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya