திரு ஆட்சிப்பீடம்
திரு ஆட்சிப்பீடம் அல்லது திருப்பீடம் (ஆங்கிலம்: Holy See) என்பது உரோமையில் உள்ள கத்தோலிக்க திருத்தந்தையின் ஆட்சிப்பீடத்தின் எல்லையினைக் குறிக்கும். இது உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமாகவும், பிற ஆட்சிப்பீடங்களில் முதன்மையானதாகவும் கருதப்படுகின்றது. திருத்தூதர் பேதுரு உரோமையில் மறைபணியாற்ற வந்தபோது இதனை நிருவினார் என நம்பப்படுகின்றது. திரு ஆட்சிப்பீடம் ஒரு இறைமையுள்ள நாட்டுக்கு ஒப்பானதாகக்கருதப்படுகின்றது. இதற்கு உரோமைச் செயலகம் என்னும் மைய்ய அரசும் அதன் அரசுத் தலைவராக கர்தினால் செயலரும் உள்ளனர். பிறநாடுகளோடு இது பண்ணுறவாண்மை கோண்டுள்ளது. இதன் அரசு சார் எல்லைகள் வத்திக்கான் நகரின் எல்லைகள் ஆகும். பொதுவாகப் பலராலும் வத்திக்கான் நகரும், திரு ஆட்சிப்பீடமும் ஒன்றாகவே தவறாகக் கருதப்படாலும், இவை இரண்டும் வேவ்வேறானவையாகும். 1929இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலாத்தரன் உடன்படிக்கையினால் வத்திக்கான் நகர் உருவானது. ஆனால் திரு ஆட்சிப்பீடம் பழங்காலமுதலே உள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கான திருத்தந்தையின் தூதர்கள் திரு ஆட்சிப்பீடத்தின் தூதர்களே அன்றி, வத்திக்கான் அரசின் தூதர்கள் அல்ல. ஐநா போன்ற பண்நாட்டு அவைகள் வத்திக்கான் நகருக்கு பதிலாக திரு ஆட்சிப்பீடத்துடனேயே வெளியுறவு கொள்கைகளையும் ஒப்பந்தங்களையும் மேற்கொள்கின்றன. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia