தில்லியின் மாவட்டங்கள்தில்லி பதினோரு வருமான மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட நடுவர் தலைமையேற்கிறார். ஒவ்வொரு மாவட்டமும் மூன்று துணைக் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துணைக்கோட்டத்திற்கும் துணைக்கோட்ட நடுவர் தலைமையேற்கிறார். துணை ஆணையர்கள் கோட்ட ஆணையருக்கு கீழ் இயங்குகின்றனர். இந்த மாவட்டங்கள் வருமானத்தை சேகரிக்கவும் நிர்வாகத்திற்கும் உருவானவை. சனவரி 1997இல் ஒன்பது மாவட்டங்கள் உருவாயின; அதற்கு முன்னதாக தில்லி முழுமையும் ஒரே மாவட்டமாக இருந்தது. தீசு-அசாரி அதன் தலைமையிடமாக இருந்தது. செப்டம்பர் 2012இல் இரண்டு புதிய மாவட்டங்கள், தென் கிழக்கு, சாகதரா மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன.[1] தில்லி அரசின் அனைத்து செயலாக்கங்களும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றுகின்றது. தவிரவும் நடுவண் அரசின் கொள்கைகளையும் மேற்பார்க்கின்றது. தில்லியின் மாவட்டங்களும் துணைக்கோட்டங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: ![]() ![]() ![]() தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மாவட்டங்கள்[2]தில்லியின் பழைய ஒன்பது மாவட்டங்கள்
மாநகராட்சிகள்இந்த மாவட்டங்களைத் தவிர, தேசிய தலைநகரப் பகுதியில் பாசறைப் பகுதி வாரியம் உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகள் செயல்படுகின்றன:
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia