தீபா மேத்தா
தீபா மேத்தா (Deepa Mehta), ஜனவரி 1, 1950 இல் பிறந்தவர். இந்திய-கனடியன் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். இவரது "பூதங்களின் முவ்வரிசை" ஃபயர் (1996), எர்த் (1998), மற்றும் வாட்டர்(2005) போன்றப் படங்களின் மூலம் அறியப்படுகிறார். ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் வரிசையில் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக இவரது "எர்த்" படம் அதிகாரபூர்வமாக நுழைந்தது. சிறந்த வெளிநாட்டு படத்திற்காக இவரது "வாட்டர்" திரைப்படத்திற்காக கனடாவில் விருதிற்காக அதிகாரபூர்வமாக நுழைந்தது. "எர்த்" ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் படமாகும் அவர் 1996 ஆம் ஆண்டில் தனது கணவர் மற்றும் தயாரிப்பாளர் டேவிட் ஹாமில்டனுடன் (கனடிய தயாரிப்பாளர்) இணைந்து ஹாமில்டன்-மேத்தா புரொடக்சன்ஸ் என்பதை துவக்கினார். இவருக்கு 2003 இல் "பாலிவுட் / ஹாலிவுட்" திரைக்கதைகளுக்காக "ஜீனி" விருது வழங்கப்பட்டது. மே 2012 இல், மேத்தா கனடாவின் மிக உயர்ந்த கௌரவமான வாழ்நாள் கலைத்துவ சாதனைக்கான கவர்னர் ஜெனரல் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் விருதைப் பெற்றார்.[2] ஆரம்ப வாழ்க்கைமேத்தா பஞ்சாபிலுள்ள அமிருதசரசு என்ற நகரத்தில் பிறந்தார் [3], இவரது தந்தை திரைப்பட விநியோகஸ்தராக பணிபுரிந்த காரணத்த,இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தேராதூனிலுள்ள வெல்ஹாம் மகளிர் உயர் நிலைப் பள்ளியில் தனது படிப்பினைத் தொடர்ந்தார் [4] தில்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரியில் மெய்யியல் பட்டம் பெற்றார். தொழில்மேத்தா பட்டம் பெற்ற பிறகு, இந்திய அரசாங்கத்திற்காக கல்வி சார்பான ஆவணப்படங்களை உருவாக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்காக வேலை செய்யத் தொடங்கினார்..[5] ஒரு குழந்தை மணமகனின் வாழ்க்கையைப் பற்றிய தனது முதல் நீள ஆவணப்படம் தயாரிப்பதில் ஈடுபட்டார்.[5] அவர் கனடிய ஆவணப்பட இயக்குநரான பால் சால்ட்மேன் என்பவரைச் சந்தித்து திருமணம் செய்துகொண்டார். 1973 ல் கணவனுடன் வாழ டோரண்டோவுக்கு குடிபெயர்ந்தார்.[6] கனடாவில் பல ஆங்கில மொழி திரைப்படங்களை மேத்தா இயக்கினார்.[7] மேத்தா 2008இல் தனது சகோதரன் திலீப் இயக்கிய "த பர்காட்டன் உமன்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.[6] 2015 ஆம் ஆண்டில் இவர் இயக்கி, ரண்தீப் ஹோடா நடித்த பீபா பாய்ஸ், 2015 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[8] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia