மகேசுவரி 27 ஏப்ரல் 1987 அன்று உதய்பூரில் பட்டயக் கணக்காளர் சத்தியநாராயணன் மகேசுவரி[4] மற்றும் கிரண் மகேசுவரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[5][6] இவர் 2008-இல் புனேவில்இளங்கலை வணிக நிர்வாகவியல் பட்டம் பெற்றார். 2010ஆம் ஆண்டில் மும்பை வெலிங்கர் மேலாண்மை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டயப் படிப்பினை முடித்தார். இவர் உதயப்பூர், இந்திய மேலாண்மை நிறுவனத்தில், பெண் தொழில்முனைவோரில் முதுகலைப் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார். பெற்றுள்ளார் (ஆண்டு 2012).[2][6][7]
இவர் உடல்நலம் மற்றும் யோகா கருத்தரங்குகள் மற்றும் வெகுஜனத் திருமணங்கள் ஏற்பாடு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.[8] திறன் மேம்பாட்டுத் தொடர்பான வழிகாட்டியாக இவர் செயல்படுகிறார்.[9]
அரசியல் வாழ்க்கை
மகேசுவரியின் தாயார் கிரண் மகேசுவரி 2020 வரை ராஜ்சமந்த் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். கோவிட்-19[10] தொற்று காரணமாக0 30 நவம்பர் 2020 அன்று இவர் காலமானார். இதனால் 2021-இல் ராஜ்சமந்த் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தீப்திக்குப் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]