துகாராம் ஓம்பலே
துகாராம் ஓம்பலே (ஆங்:Tukaram Omble மரா:तुकाराम ओंबले) 2008 மும்பாய் தாக்குதல்களின் போது தீவிரவாதி அஜ்மல் கசாப்பை பிடிக்கும் போது உயிரிழந்த மும்பைக் காவலராவார். அத்தாக்குதல் நடத்திய தீவிரவாதியை உயிருடன் பிடிப்பதில் முக்கிய பங்காற்றினார். இவரின் தியாகத்தைப் போற்றும் விதமாக இந்திய அரசு 2009 சனவரி 26ல் அசோகச் சக்கரம் விருது வழங்கி கவுரவப்படுத்தியது[1]. இவரின் மனைவி உட்பட நான்கு மகள்கள் இவருக்குண்டு. கடைசி நிமிடங்கள்2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் மிஞ்சிய அஜ்மல் கசாப் உட்பட இரண்டு தீவிரவாதிகள் ஸ்கோடா வாகனத்தில் மரின் டிரைவ் பகுதியில் விரைந்தனர். அவர்கள் கலஷ்னினவ் துப்பாக்கிகளும், கை கிரணட்களும், நடைபேசியும் கொண்டிருந்தனர். தீவிரவாதத் தாக்குதல் பற்றித் தகவல் அறிந்த 48 வயதான துகாராம், எந்தவித ஆயுதங்களுமின்றி தனது இருசக்கரவாகனத்தில் விழிப்புடனிருந்தார். இரவு 12:45 மணிவாக்கில் அவ்வழியே வந்த தீவிரவாதிகளை இருசக்கரவாகனத்தில் விரட்டினார். கிர்காம் சௌபாதி சாலை சந்திப்பு வேகத் தடையில் தீவிரவாதிகளின் வண்டி வேகம் குறைந்த போது அவர்களை மடக்கி பிடிக்கமுயசித்தார். இவருடன் வந்த மற்ற காவலர்கள் ஒரு தீவிரவாதியைச் சுட்டுக்கொன்றனர். மற்றொருவரான கசாப்பை, துகாராம் உயிருடம் பிடிக்க முனைகையில் கசாபின் துப்பாக்கிக் குண்டுகள் இவரை துளைத்தன. இருந்தபோதும் கசாப் மற்றவர்களைச் சுட்டுவிடாமல் இறுதிவரை தடுத்து கசாப்பைப் பிடித்துத்தந்து உயிரிழந்தார்.[2] விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia