துகாராம் (1938 திரைப்படம்)
துகாராம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் முசிரி சுப்பிரமணிய ஐயர், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியானது. பிற்காலத்தில் பிரபல பின்னணிப் பாடகியாக விளங்கிய ஆர். பாலசரஸ்வதி இத்திரைப்படத்தில் சிறுமி வேடத்தில் துகாராமின் மகளாக நடித்திருந்தார்.[1] கதைஇத்திரைப்படம் ஆன்மீக ஞானியான துக்காராம் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கிறது. நடிகர்கள்
தயாரிப்புபிரபல கருநாடக இசை வித்துவானாகிய முசிரி சுப்பிரமணிய ஐயர் நடித்த ஒரே ஒரு திரைப்படம் இதுவாகும். எழுத்தாளரும் விமர்சகருமான கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கூற்றுப்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் மீசை வைக்கவேண்டியிருந்தது. கருநாடக இசைக்கலைஞர்கள் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கம் அப்போது இருக்கவில்லை. அதனால் சுப்பிரமணிய ஐயர் மீசையை மழித்திருந்தார். எனவே அவர் நடிக்கும் போது, அவருக்கு ஒட்டு மீசை வைக்கப்பட்டது. சுப்பிரமணிய ஐயருக்கு வைத்த ஒட்டு மீசையின் பசை உலர்ந்துவிட்டால் அது எரிச்சலைத் தருவதாக இருந்தது. அவர் தான் சொந்தமாக மீசையை வளர்க்கும் வரை சிறிது காலம் காத்திருக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறினார். அதனால் அவருக்கு மீசை வளரும் வரை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. படபிடிப்பு முடிந்த அடுத்த கனமே சுப்ரமணிய ஐயர் ஒட்ட மழித்துவிட்டார். இதையிட்டு கல்கி ஆனந்த விகடன் இதழில் எழுதிய துகாராம் திரைப்பட விமர்சனத்தில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.[2] பாடல்கள்இப்படத்தின் பிரதிகள் எதுவும் கிடைக்கவில்லை.[1] பாடல்கள் கொலம்பியா இசைத்தட்டுகளில் வெளிவந்தன. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia