தும்பு

தென்னை நார் தனிப்படுத்தல் (கயிறு)

தும்பு அல்லது தென்னை நார் (Coir) என்பது தென்னை மரத்தின், தேங்காய் கதம்பையில் (தேங்காயின் மேல்மட்டை) இருந்து பிரித்தெடுக்கப்படுவதாகும். தும்பில் கயிறு, கால் மிதியடி, தூரிகை போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.[1][2]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் கதம்பையில் இருந்து தும்பு தயாரித்து விற்பனை செய்யும் ஆலைகள் உள்ளன. குறிப்பாக இராஜாக்கமங்கலம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆலைகள் அதிகம். ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஆலைகளில் கதம்பையில் இருந்து தும்புகள் பிரித்தெடுத்து தூரிகை தயாரிக்க அனுப்புகின்றனர். மணக்குடி பகுதியில் இருக்கும் ஆலைகள், தும்புகளை பிரித்தெடுத்து மிதியடி, கயிறு தயாரிக்க அனுப்புகின்றனர்.

தேனி மாவட்டத்தில் தென்னை நார் (தும்பு) கயிறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றிலிருந்து நார்க் கழிவுகள், அரபு நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறைக் காரணமாக, தென்னைமர மஞ்சுத் தும்பையை மரங்களின் வேர்ப் பகுதிகளில் பரப்பி தண்ணீர் பாய்ச்சுகின்றனர். நீரை உறிஞ்சிக்கொள்ளும் நார்த் தும்பு பல நாட்கள் ஈரத்தன்மையிலேயே இருக்கிறது.

வணிக ரீதியான இயற்கை இழைகளில் மிகவும் அடர்த்தியானதும், எதிர்ப்புத் திறன் கொண்டதுமான தென்னை நார், தேங்காய்களின் வெளிப்புற ஓட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு கரடுமுரடான, குறுகிய நார் ஆகும். அதன் குறைந்த சிதைவு விகிதம், நீடித்த புவி-துகில்களை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நன்மையாகும்.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "COCOUNT FIBRE". coirboard.gov.in (ஆங்கிலம்) - © 2014. Retrieved 2025-07-24.
  2. 2.0 2.1 "Coir". www.fao.org/economic (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-07-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya