தெலங்காணா மாநிலங்களவை உறுப்பினர்கள்தெலங்காணா மாநிலங்களவை உறுப்பினர்கள் (List of Rajya Sabha members from Telangana) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கு தெலங்காணா மாநிலத்தின் 7 உறுப்பினர்களைக் குறிப்பதாகும். இந்த 7 இடங்களுக்கான உறுப்பினர்கள் தெலங்காணா மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, வேட்புமனுவின் போது ஒரு கட்சி வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது மற்றும் கட்சி வாக்களிக்க ஒரு உறுப்பினரை நியமிக்கிறது. ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாகத் தெலுங்கானா மாநிலத்திற்கு அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தற்போதைய உறுப்பினர்கள்
ஆந்திராவிலிருந்து பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு 18 இடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. பிரிவினைக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசத் தொகுதிகள் 11ஆக மாற்றப்பட்டு, தெலுங்கானாவில் 7 இடங்கள் இருந்தன. 30 மே 2014 அன்று, தெலங்காணாவின் 7 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, பதவியிலிருந்த 18 உறுப்பினர்களிடையே குலுக்கல் நடத்தப்பட்டது. இதில், தெலுங்கு தேசம் கட்சியின் 3 உறுப்பினர்களும், இந்தியத் தேசிய காங்கிரசின் 4 உறுப்பினர்களும் தெலங்காணா மாநிலத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia