தெலூரியம் நாற்குளோரைடு

தெலூரியம் நாற்குளோரைடு
Tellurium tetrachloride
தெலூரியம் டெட்ராகுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
தெலூரியம்(IV) குளோரைடு
டெட்ரா தெலூரியம் எக்சாடெக்கா குளோரைடு
வேறு பெயர்கள்
தெலூரியம் குளோரைடு
இனங்காட்டிகள்
10026-07-0 N
ChemSpider 55367 Y
InChI
  • InChI=1S/Cl4Te/c1-5(2,3)4 Y
    Key: SWLJJEFSPJCUBD-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cl4Te/c1-5(2,3)4
    Key: SWLJJEFSPJCUBD-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image

ஒருமம்
Image நான்மம்

பப்கெம் 61443
  • Cl[Te](Cl)(Cl)Cl ஒருமம்
  • [Cl+2]12[Te-2](Cl)(Cl)(Cl)3[Cl+2]4[Te-2](Cl)(Cl)(Cl)1[Cl+2]5[Te-2](Cl)(Cl)(Cl)2[Cl+2]3[Te-2]45(Cl)(Cl)(Cl) நான்மம்
UNII DNY2R5498H N
பண்புகள்
TeCl4
வாய்ப்பாட்டு எடை 269.41 கி/மோல்
தோற்றம் நீர் உறிஞ்சும் திறன் வெளிர் மஞ்சள் திண்மம்
(

இணைந்தால், மெரூன் திரவம்)

அடர்த்தி 3.26 g/cm3, திண்மம்
உருகுநிலை 224 °C (435 °F; 497 K)
கொதிநிலை 380 °C (716 °F; 653 K)
சூடான கந்தகக் குளோரைடு[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு, mS80
புறவெளித் தொகுதி C12/c1, எண். 15
ஒருங்கிணைவு
வடிவியல்
உருக்குலைந்த எண்முகம் (Te)
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.59 D (வாயு நிலை)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சுத்தன்மை வாய்ந்தது, அரிக்கும் தன்மை கொண்டது, சுவாச எரிச்சலூட்டும் தன்மை கொண்டது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தெலூரியம் நாற்புளோரைடு
தெலூரியம் டெட்ராபுரோமைடு
தெலூரியம் நான்கையோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் செலீனியம் நாற்குளோரைடு
பொலோனியம் நாற்குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)


தெலூரியம் நாற்குளோரைடு (Tellurium tetrachloride) என்பது TeCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தெலூரியம் டெட்ராகுளோரைடு என்றும் அறியப்படும் இந்தச் சேர்மம் ஆவியாகும் தன்மை கொண்டதாகும். 200 °செல்சியசு வெப்பநிலையில் 0.1 மி.மி பாதரச அழுத்தத்தில் பதங்கமாகும்.[2] உருகிய TeCl4 அயனித் தன்மை கொண்டிருக்கும். TeCl3+ மற்றும் Te2Cl102− அயனிகளாகப் பிரியும்.[2]

கட்டமைப்பு

வாயு நிலையில் தெலூரியம் நாற்குளோரைடு ஒற்றைப்படி சேர்மமாகும். இது SF4 சேர்மத்தைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.[3] திண்ம நிலையில், இது ஒரு நாற்படி கியூபேன் வகை கொத்து ஆகும். ஒவ்வொரு Te4Cl4 மையத்திற்கும் மூன்று முனைய குளோரைடு ஈந்தணைவிகள் சேர்ந்திருக்கும். மாற்றாக, இந்த நாற்படிக் கட்டமைப்பை முக-உச்சி குளோரின்கள் மற்றும் ஒரு தெலூரியம் அணுவிற்கு மூன்று முனைய குளோரின்கள் கொண்ட Te4 நான்முகியாகக் கருதலாம். இது ஒவ்வொரு தெலூரியம் அணுவிற்கும் ஒரு சிதைந்த எண்முக சூழலைக் கொடுக்கும்.

தயாரிப்பு

தெலூரியம் தூளுடன் குளோரின் வாயுவைச் சேர்த்து குளோரினேற்ற வினைக்கு உட்படுத்தினால் தெலூரியம் நாற்குளோரைடு உருவாகும்.[4]

Te + 2 Cl2 → TeCl4

இந்த வினை வெப்பத்துடன் தொடங்கப்படுகிறது. தயாரிப்பு வடிகட்டுதல் மூலம் தனிமைப்படுத்தப்படுகிறது. கச்சா TeCl4 குளோரின் வளிமண்டல அழுத்தத்தில் வடிகட்டுதல் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.[1]

மாற்றாக தெலூரியம் நாற்குளோரைடை குளோரின் மூலமாக சல்பூரைல் குளோரைடைப் (SOCl) பயன்படுத்தி தயாரிக்கலாம். அறை வெப்பநிலையில் தெலூரியத்தை கந்தக மோனோகுளோரைடுடன் (S2Cl2) வினைபுரியச் செய்யும் மற்றொரு தயாரிப்பு முறை இதுவாகும். இந்த வெப்ப உமிழ்வு வினை விரைவாக வெள்ளை ஊசி போன்ற TeCl4 படிகங்களை உருவாக்குகிறது.[5]

வினைகள்

தெலூரியம் நாற்குளோரைடு அதிக இணைதிறன் கொண்ட கரிம தெலூரியம் சேர்மங்களுக்கான நுழைவாயில் சேர்மமாகும். அரைலேற்றம் நிலைமைகளைப் பொறுத்து, இவ்வினை Te(C6H4R)2Cl2, [Te(C6H4R)5], [Te(C6H4R)6]2−.[6] ஆகியவற்றைக் கொடுக்கிறது.

கரிமத் தொகுப்பு வினைகளில் TeCl4 சேர்மத்தின் பயன்பாடுகள் மிகக் குறைவாகும். இதன் சமான எடை அதிகமாகும். மேலும் கரிமத்தெலூரியம் சேர்மங்களின் நச்சுத்தன்மையும் சிக்கலாக உள்ளது. கரிமத் தொகுப்பில் தெலூரியம் நாற்குளோரைடைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பதிவாகியுள்ளன.[7]

ஆல்க்கீன்களுடன் சேர்த்து Cl-C-C-TeCl3 வழிப்பெறுதிகளைத் தருகிறது. இதில் உள்ள தெலூரியத்தை பின்னர் சோடியம் சல்பைடுடன் அகற்றலாம். எலக்ட்ரான் நிறைந்த அரீன்களுடன் வினைபுரிந்து அரைல் தெலூரியம் சேர்மங்களைத் தருகின்றன. இதனால், அனைசோல் TeCl2(C6H4OMe)2 சேர்மம் உருவாகிறது. இதை ஈரரைல் தெலூரைடாக குறைக்கலாம். தெலூரோபீன்கள் போன்ற தெலூரியம் கொண்ட பல்லினவளையங்களுக்கு TeCl4 ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.[1]

தெலூரியம் நாற்குளோரைடுடன் உலோக தெலூரியத்தைச் சேர்த்து சூடாக்கினால் தெலூரியம் இருகுளோரைடு (TeCl2) கிடைக்கும்.[1]

ஈரப்பதமான காற்றில், TeCl4 தெலூரியம் ஆக்சிகுளோரைடை (TeOCl2) உருவாக்குகிறது. இது அதிகப்படியான தண்ணீருடன் மேலும் சிதைவடைந்து தெலூரசு அமிலத்தை (H2TeO3) உருவாக்குகிறது. [8]

பாதுகாப்பு

மற்ற தெலூரியம் சேர்மங்களைப் போலவே, TeCl4 நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். இது நீராற்பகுப்பின் போது HCl அமிலத்தை வெளியிடுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Petragnani, Nicola; Mendes, Samuel R.; Silveira, Claudio C. (2008-04-07). "Tellurium Tetrachloride: an improved method of preparation". Tetrahedron Letters 49 (15): 2371–2372. doi:10.1016/j.tetlet.2008.02.085. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4039. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0040403908003134. 
  2. 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
  3. எஃப். ஆல்பர்ட் காட்டன்; சாப்ரி வில்கின்சன்; கார்லோசு முரில்லோ; மேன்பிரட் பாக்மன் (1999), Advanced Inorganic Chemistry (6வது ed.), நியூ யார்க்கு: வைலி-இன்டசயின்சு, ISBN 0-471-19957-5
  4. Suttle, J. F.; Smith, C. R. F. (1950). Audrieth, Ludwig F. (ed.). Inorganic Syntheses. Vol. 3. pp. 140–2. doi:10.1002/9780470132340. ISBN 978-0-470-13162-6.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Lenher, Victor. "Tellurium Tetrachloride.". Journal of the American Chemical Society 24. doi:10.1021/ja02016a007. https://pubs.acs.org/doi/pdf/10.1021/ja02016a007. 
  6. Miyasato, Masataka; Sagami, Takao; Minoura, Mao; Yamamoto, Yohsuke; Akiba, Kin-ya (2004). "Syntheses and Reactions of Hexavalent Organotellurium Compounds Bearing Five or Six Tellurium-Carbon Bonds". Chemistry – A European Journal 10 (10): 2590–2600. doi:10.1002/chem.200305260. பப்மெட்:15146530. 
  7. Petragnani, N.; Comasseto, J. V. (1991). "Tellurium Reagents in Organic Synthesis; Recent Advances. Part 1". Synthesis 1991 (10): 793–817. doi:10.1055/s-1991-26577. https://archive.org/details/sim_synthesis_1991-10_10/page/n11.  and Petragnani, N.; Comasseto, J. V. (1991). "Tellurium Reagents in Organic Synthesis; Recent Advances. Part 2". Synthesis 1991 (11): 897–919. doi:10.1055/s-1991-26605. https://archive.org/details/sim_synthesis_1991-11_11/page/n11. 
  8. Simons, J. H. (1930-09-01). "The Properties of Tellurium Tetrachloride". Journal of the American Chemical Society 52 (9): 3488–3493. doi:10.1021/ja01372a003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/epdf/10.1021/ja01372a003?ref=article_openPDF.. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya