இருதெலூரியம் புரோமைடு
இருதெலூரியம் புரோமைடு (Ditellurium bromide) என்பது Te2Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியத்தின் நிலைப்புத் தன்மை கொண்ட கீழ்நிலை புரோமைடுகள் சிலவற்றில் இதுவும் ஒன்றாகும். சால்கோசன்/ஆலைடு விகிதம் இரண்டைவிட குறைவாகும் போது , கந்தகம் மற்றும் செலினியம் சேர்மங்கள் போலல்லாமல் தெலூரியம் பலபகுதி கீழாலைடுகளாக உருவாகிறது. [1] தயாரிப்பு மற்றும் பண்புகள்Te2Br சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. தளத்தில் இரட்டைப் பாலமிட்டு ஆக்ரமித்துள்ள Br அணுக்களுடன் கூடிய தெலூரியம் சங்கிலிகளால் இதன் கட்டமைப்பு ஆக்கப்பட்டுள்ளது. தெலூரியத்தை விகிதவியல் அளவின் அடிப்படையில் புரோமினுடன் சேர்த்து 215 ° செ வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் இருதெலூரியம் புரோமைடு தோன்றுகிறது. இதனோடு இயைந்த குளோரைடு மற்றும் அயோடைடுகளும் (Te2Cl மற்றும் Te2I) அறியப்படுகின்றன[2]. இவை தவிர மஞ்சள் நிறத்தில் திரவ Te2Br2 மற்றும் ஆரஞ்சு நிறத்தில் திண்ம TeBr4 முதலியனவும் அறியப்படுகின்றன[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia