தேசிய விவசாயிகள் ஆணையம்

தேசிய விவசாயிகள் ஆணையம்
राष्ट्रीय किसान आयोग

இந்திய அரசு இலச்சினை
ஆணையம் மேலோட்டம்
அமைப்பு18 நவம்பர் 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-11-18)
ஆட்சி எல்லைஇந்தியா இந்திய அரசு
ஆணையம் தலைமை

தேசிய விவசாயிகள் ஆணையம் (National Commission on Farmers (NCF)) என்பது இந்திய அரசால் 18 நவம்பர் 2004 அன்று பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் ஆகும். இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை குறித்து விரிவாக விசாரணை செய்து நாடு தழுவிய பேரிடர் நிவாரணங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய இந்த ஆணையம் அமைக்கப்பட்டது .[1][2] ஆணையத்திற்கான விசாரணை குறிப்பு விதிமுறை வரம்புகள் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் பட்டியலிடப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலித்தன. இந்த ஆணையம் முறையே டிசம்பர் 2004, ஆகத்து 2005, திசம்பர் 2005 மற்றும் ஏப்ரல் 2006 ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தது. ஐந்தாவது மற்றும் இறுதி அறிக்கை 4 அக்டோபர் 2006 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. "வேகமான மற்றும் கூடுதல் உள்ளடக்கிய வளர்ச்சி” என்ற இலக்கை அடைய ஆணையத்தின் அறிக்கைகள் பரிந்துரைகளைக் கொண்டிருந்தன. 11 வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அணுகுமுறையில் திட்டமிடப்பட்டுள்ளபடி, இந்த ஆணைத்தின் அறிக்கை “விவசாயிகளுக்கான எம். எஸ். சுவாமிநாதன் அறிக்கை” என்று அழைக்கப்படுகிறது[1][3]

ஆணையத்தின் இறுதி அறிக்கையில் விவசாயிகளின் துயரத்திற்கான காரணங்கள் மற்றும் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது. மேலும் முழுமையான தேசிய கொள்கை மூலம் விவசாயிகளுக்கான நிவாரணங்களைப் பரிந்துரைத்திருந்தது.[4]

விவசாயிகளுக்கான திருத்தப்பட்ட வரைவு தேசிய கொள்கையில் இணைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகளில் நிலம், நீர் ஆகியவற்றை உள்ளடக்கிய சொத்து சீர்திருத்தங்கள் அடங்கும். மேலும்கால்நடைகள், மற்றும் உயிரிவளங்கள், விவசாயிகளுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் போன்றவையும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன [5]

ஆணையத்தின் அமைப்பு

விவசாயிகள் தொடர்பான மறுகட்டமைக்கப்பட்ட தேசிய ஆணையத்தின் அமைப்பு பின்வருமாறு:[6]

  • தலைவர் – எம். எஸ். சுவாமிநாதன்
  • முழுநேர உறுப்பினர்கள் – ராம் பதான் சிங், ஒய். சி. நந்தா
  • பகுதி நேர உறுப்பினர்கள் – ஆர். எல். பிடேல், ஜெகதீஷ் பிரதான், சாந்தா நிம்ப்கர், அதுல் குமார் அஞ்சன்
  • உறுப்பினர் செயலாளர் – அதுல் சின்ஹா

ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகள்

  1. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான விரிவான நடுத்தர கால மூலோபாயத்தை உருவாக்குதல் .
  2. முக்கிய விவசாய முறைகளின் உற்பத்தித்திறன், லாபம், ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முறைகளை முன்மொழிதல்
  3. தொழில்நுட்பத்திற்கும் பொதுக் கொள்கைக்கும் இடையிலான சினெர்ஜியைக் கொண்டு வாருதல்
  4. படித்த இளைஞர்களை விவசாயத்தில் ஈர்ப்பதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்
  5. விவசாய ஆராய்ச்சியில் முதலீட்டை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு கிராமப்புற கடன் ஓட்டத்தை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை சீர்திருத்தங்களை பரிந்துரைத்தல்
  6. வறண்ட நில விவசாயத்திற்கான சிறப்பு திட்டங்களை வகுத்தல்
  7. பண்ணை பொருட்களின் தரம் மற்றும் செலவு போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்
  8. பெண்களின் கடன், அறிவு, திறன், தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்
  9. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு சுற்றுச்சூழல் அடிப்படை வளங்களை பாதுகாப்பதிலும், பேண்தகு விவசாயத்தை திறம்படமேம்படுத்துவதிலும் விவசாயிகள் தங்கள் பங்கை ஆற்றுவதற்கான முறைகளை பரிந்துரைத்தல்

செயல்படுத்தல்

ஆணையத்தின் பரிந்துரைகளில் சில அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

மேலும் வாசிக்க

  • Mishra, Dheeraj (27 December 2020). "Reality Belies Modi Govt Claims of Implementing Swaminathan Commission's Report". The Wire.
  • Swaminathan, M. S. (January–June 2016). "National Policy for Farmers Ten Years Later". Review of Agrarian Studies 6 (1): 133–144. http://www.ras.org.in/national_policy_for_farmers_ten_years_later. 
  • . 8 August 2018. 
  • . 2016-03-12. 
  • Pradhan, Bijoy (29 December 2020). "Farmers ignorant of Swaminathan commission recommendations". The New Indian Express.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Swaminathan Report Summary". PRS Legislative Research.
  2. M.S. Swaminathan to head National Commission on Farmers
  3. "National Commission on Farmers 3rd Report" (PDF). agricoop.nic.in. Archived from the original (PDF) on 2022-08-20. Retrieved 2024-10-01.
  4. "Home | PRSIndia". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-02-02.
  5. "India Budget | Ministry of Finance | Government of India" (PDF). www.indiabudget.gov.in. Retrieved 2023-02-02.
  6. National Commission on Farmers All Reports
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya