தேஜா நிதமானுரு Teja Nidamanuru தனிப்பட்ட தகவல்கள் முழுப்பெயர் அனில் தேஜா நிதமானுரு பிறப்பு 22 ஆகத்து 1994 (1994-08-22 ) (அகவை 30) விசயவாடா , இந்தியா மட்டையாட்ட நடை வலக்கை பந்துவீச்சு நடை வலக்கை எதிர்ச்சுழல் பங்கு பன்முக வீரர் பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி ஒநாப அறிமுகம் (தொப்பி 80 ) 31 மே 2022 எ. மேற்கிந்தியத் தீவுகள் கடைசி ஒநாப 25 அக்டோபர் 2023 எ. ஆத்திரேலியா இ20ப அறிமுகம் (தொப்பி 54 ) 11 சூலை 2022 எ. பப்புவா நியூ கினி கடைசி இ20ப 4 ஆகத்து 2022 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி 2017/18–2018/19 ஆக்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை
பஒநா
இ20ப
ப.அ
இ20
ஆட்டங்கள்
27
6
27
11
ஓட்டங்கள்
665
30
625
36
மட்டையாட்ட சராசரி
28.91
10.00
27.17
12.00
100கள்/50கள்
2/3
0/0
2/2
0/0
அதியுயர் ஓட்டம்
111
21
111
21
வீசிய பந்துகள்
6
–
18
84
வீழ்த்தல்கள்
0
–
0
3
பந்துவீச்சு சராசரி
–
–
–
43.00
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள்
–
–
–
0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
–
–
–
0
சிறந்த பந்துவீச்சு
–
–
–
1/22
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள்
7/–
1/–
7/–
2/–
அனில் தேஜா நிதமானுரு (Anil Teja Nidamanuru , பிறப்பு: 22 ஆகத்து 1994) என்பவர் இந்தியாவில் பிறந்து, நெதர்லாந்து துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட வீரர். இவர் முன்னர் ஆக்லாந்து அணியில் நியூசிலாந்து உள்ளூர் துடுப்பாட்ட விளையாட்டுகளில் விளையாடினார்.[ 1] [ 2]
துடுப்பாட்டத் துறை
நிதமானுரு இந்தியாவில் விசயவாடாவில் பிறந்தார்.[ 1] [ 3] தனது முதலாவது இருபது20 போட்டியை ஆக்லாந்து அணிக்காக 2017 திசம்பரில் விளையாடினார்.[ 4] அதே அணிக்காக 2018 நவம்பரில் தனது முதலாவது பட்டியல் அ போட்டியில் விளையாடினார்.[ 5] 2019 இல் நெதர்லாந்துக்குப் புலம்பெயர்ந்தார்.[ 6] அங்கு உத்ரெக்ட் நகரில் காம்பொங் துடுப்பாட்ட அணியில் பயிற்சியாளராகச் சேர்ந்தார்.[ 7] அதன் பின்னர் பஞ்சாப் ரொட்டர்டாம் அணியில் விளையாடினார்.[ 8]
மே 2022 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் இடச்சு பன்னாட்டு ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டு,[ 9] தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை 2022 மே 31 இல் விளையாடினார்.[ 10] 2022 சூலையில், நெதர்லாந்தின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் சேர்க்கப்பட்டார்.[ 11] தனது முதலாவது இ20ப போட்டியை 2022 சூலை 11 இல், பப்புவா நியூ கினி அணிக்கெதிராக விளையாடினார்.[ 12]
2023 மார்ச்சில், தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் நூறு (துடுப்பாட்டம்)|சதத்தை]] சிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிப் பெற்றார்.[ 13]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "Teja Nidamanuru" . ESPN Cricinfo . Retrieved 13 December 2017 .
↑ " 'Bizarre' but memorable day" . Otago Daily Times . Retrieved 25 May 2022 .
↑ "Stratex: from the call centre to the board room" . 50 Global Leaders. 16 June 2021. https://50globalleaders.com/stratex-from-the-call-centre-to-the-board-room-how-a-telecoms-worker-became-a-global-leader/ . பார்த்த நாள்: 31 May 2022 . [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ "1st Match (D/N), Super Smash at Auckland, Dec 13 2017" . ESPN Cricinfo . Retrieved 13 December 2017 .
↑ "The Ford Trophy at Lincoln, Nov 14 2018" . ESPN Cricinfo . Retrieved 14 November 2018 .
↑ "Versterking vanuit Nieuw-Zeeland" . SV Kampong Cricket . Retrieved 25 May 2022 .
↑ "Hollis signs pro contract" . Gisborne Herald . 11 April 2019. https://www.gisborneherald.co.nz/local-sport/20190411/hollis-signs-pro-contract/ . பார்த்த நாள்: 31 May 2022 . [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ "Last eight seek places in Dutch T20 finals day" . Emerging Cricket. 20 August 2021. https://emergingcricket.com/news/last-eight-seek-places-in-dutch-t20-finals-day/ . பார்த்த நாள்: 31 May 2022 .
↑ "Dutch mens cricket squad announced for ICC Super League Series against West Indies" . Royal Dutch Cricket Association . Retrieved 25 May 2022 .
↑ "1st ODI, Amstelveen, May 31, 2022, West Indies tour of Netherlands" . ESPN Cricinfo . Retrieved 31 May 2022 .
↑ "Squad announcement for T20 World Cup Qualifier in Zimbabwe" . Royal Dutch Cricket Association . Retrieved 4 July 2022 .
↑ "3rd Match, Group B, Bulawayo, July 11, 2022, ICC Men's T20 World Cup Qualifier" . ESPN Cricinfo . Retrieved 11 July 2022 .
↑ "Maiden ODI hundred Nidamanuru helps the Dutch past Zimbabwe in insane match" . Royal Dutch Cricket Association (in ஆங்கிலம்). Retrieved 2023-03-23 .
வெளி இணைப்புகள்