தேடிஸ்
தேடிஸ் Datis or Datus ( கிரேக்கம்: Δάτης , பழைய ஈரானியம் : *Dātiya-, அச்செமனிட் எலமைட் : Da-ti-ya [1] ), என்பவர் பேரரசர் டேரியஸ் ஆட்சியின் போது பாரசீகப் பேரரசில் பணியாற்றிய ஒரு மீடியன் பிரபு மற்றும் கடற்படைத் தளதி ஆவார். இவர் கிரேக்க விவகாரங்களை நன்கு அறிந்திருந்தார் மேலும் கிரேக்கத் தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தார்.[1] கிரேக்கர்களுக்கு எதிரான பாரசீகப் போர்களின் முதல் போர்ப் பயணத்தில் பாரசீகப் படைகளை இளைய ஆர்டபெர்னசுடன் கூட்டுத் தலைமை வகித்தார். வாழ்க்கைக் குறிப்புகிரேக்க பாரசீகப் போர்களுக்கு முன், ஐயோனியன் கிளர்ச்சியின் போது தேடிஸ் பாரசீக தளபதியாக இருந்தார். கிமு 494 இல் ஐயோனியர்களுக்கு எதிரான எதிர்-தாக்குதலை தேடிஸ் வழிநடத்தினார்.[2] மார்தோனியசு என்ற தளபதிக்கு பதிலாக தேடிஸ் மற்றும் அர்டாபெர்னெஸ் என்ற மற்றொரு அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஏதென்ஸ் மற்றும் எரீத்திரியாவை அடிமைப்படுத்தவும், கிரேக்க அடிமைகளை அகாமனசிய மன்னரின் முன் கொண்டு வரந்து நிறுத்தவும் தேடிசுக்கு கட்டளையிடப்பட்டது. இதை செய்து முடிக்க, கிரேக்கத்தின் கிழக்குக் கடற்கரையில் ஒரு அரண் நிலையை நிறுவ தேடிஸ் முயன்றார். கிமு 490 இல், தேடிஸ் ஐயோனியன் கடற்கரையிலிருந்து சாமோசுக்குப் போர்ப் பயணம் செய்தார். பின்னர் அவர் ஐகாரியன் கடல் வழியாக டெலோஸ் மற்றும் நக்சஸ் தீவுகளுக்குச் சென்றார்.[3] தேடிஸ் வந்தவுடன் தீவுகளில் வசித்தவர்கள் ஓடிவிட்டனர். தேடிஸ் பின்னர் அவர்களுக்கு தீங்கு செய்மாட்டேன் என்று ஒரு செய்தியை அனுப்பினார். அப்பல்லோவின் பலிபீடத்தில் தேடிஸ் அதிக அளவு தூபத்தை எரித்தார்.[4] தேட்டிசின் படைகள் கிரேக்கக் கரையோரமாகப் பயணித்து ஒவ்வொரு நகரமாக கடந்தது. காரிஸ்ட்டஸ் என்ற ஒரு நகரம் தேடியசை எதிர்த்தது. எனவே 80,000 வீரர்கள் மற்றும் 200 கப்பல்களைக் கொண்ட அவரது இராணுவம் நகரத்தை முற்றுகையிட்டது. நகரைச் சுற்றியிருந்த பயிர்களை அழித்து முற்றுகையைத் தொடர்ந்தது. இறுதியில், நகரம் வீழ்ந்து, சரணடைந்தது.[4][5] கிமு 490 இல் எரீத்திரியாவை தேடிஸ் முற்றுகையிட்டபோது, எரீத்திரியர்களுக்குள் இவரை எதிர்கொள்வது குறித்து பல கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. சில எரீத்திரியன்கள் நகரம் சரணடைய வேண்டும் என்றனர். சிலர் கிரேக்க மலைகளில் கொரில்லா போரை நடத்த விரும்பினர். சில எரீத்திரியான்கள் நகரத்தை பாரசீகர்களிடம் ஒப்படைக்க விரும்பினர். நான்காயிரம் ஏதெனியன் குடியேற்றவாசிகள் எரீத்திரியாவைப் பாதுகாக்க கால்சிசிலிருந்து புறப்பட்டனர். தேடிஸ் எரீத்திரியார்களைத் தாக்கினார், இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டன. முற்றுகையின் ஏழாவது நாளில், எரீத்திரியர்கள் சரணடைந்தனர். மேலும் கிரேக்கர்களால் சர்திஸ் எரிக்கப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக எரீத்திரியா நகரத்தில் உள்ள அனைத்து கோவில்களும் எரிக்கப்பட்டன.[4] அழிக்கப்பட்ட கோயில்களில் அப்பல்லோ தாப்னெபோரோஸ் கோயிலும் ஒன்றாகும்.[6] அதே ஆண்டில் மராத்தான் சமரில் ஏதெனியர்களுக்கு எதிராக பாரசீக தாக்குதல் படைக்கு தலைமை வகித்தார். மராத்தானில் தேடிஸ் கொல்லப்பட்டதாகவும், ஏதெனியர்கள் அவரது உடலை ஒப்படைக்க மறுத்ததாகவும் சினிடசின் செட்சியாஸ் கூறுகிறார்.[7] இருப்பினும், தேடிஸ் போரில் உயிர் பிழைத்தார் என்ற எரோடோடசின் கூற்றுடன் இது முரண்படுகிறது.[8] குடும்பம்தேடிசுக்கு அர்மமித்ரஸ் மற்றும் தித்தேயஸ் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவரது இரு பிள்ளைகளும் குதிரைப்படை அதிகாரிகளாகி, முதலாம் செர்கசிடம் பணியாற்றினர்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia