கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பு
கிரேக்க-பாரசீகப் போர்களின் போது கிரேக்கத்தின் மீதான முதல் பாரசீகப் படையெடுப்பு கி.மு. 492 இல் தொடங்கியது. மேலும் கி.மு. 490 இல் மராத்தான் போரில் தீர்க்கமான ஏதெனியன் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்தது. இரண்டு தனித்துவமான போர்த் தொடர்களைக் கொண்ட இந்த படையெடுப்பு, ஏதென்ஸ் மற்றும் எரீத்திரியா நகர அரசுகளைத் தண்டிப்பதற்காக பாரசீக மன்னர் பேரரசர் டேரியசின் கட்டளையினால் நடத்தப்பட்டது. இந்த நகரங்கள் பாரசீக ஆட்சிக்கு எதிரான ஐயோனியன் கிளர்ச்சியின் போது ஐயோனியா நகர அரசுகளை ஆதரித்தன. இதனால் டேரியசின் கோபத்திற்கு ஆளாகின. டேரியஸ் தனது பேரரசை ஐரோப்பாவிற்குள் விரிவுபடுத்தவும், அதன் மேற்கு எல்லையைப் பாதுகாக்கவும் ஒரு வாய்ப்பாகவும் இதைக் கண்டார். கி.மு. 492 இல் முதல் போர்த் தொடரானது பாரசீகத் தளபதியான மார்தோனியசு தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அப்போர் தொடரில் திரேசு மீண்டும் அடிபணியச் செய்யயப்பட்டது. மேலும் மக்கெடேனியாவை பாரசீகத்துக்கு முழுக்க கீழ்ப்படிந்த இராச்சியப் பகுதியாக மாற்றும்படி கட்டாயம் ஏற்பட்டது. [3] இருப்பினும், அதோஸ் மலையின் கடற்கரையில் புயலில் மார்தோனியசின் கடற்படை சிதைந்ததால் அவர்களின் அடுத்த முன்னேற்றம் தடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, டேரியஸ் தனக்கு அடிபணியுமாறு, கிரேக்கத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தன் தூதர்களை அனுப்பினார். அவர்கள் தாங்கள் அடிபணிந்ததின் அடையாளமாக தங்கள் மண்ணையும், தண்ணீரையும் கொடுத்தனுப்புமாறு கோரினார். ஏதென்சு, எசுபார்த்தாவைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து நகர அரசுகளிடமிருந்தும் அவர்கள் அதைப் பெற்றனர். ஏதென்சும், எசுபார்த்தாவும் பாரசீக தூதர்களைக் கொன்றன. இதனால் அடுத்த ஆண்டு தங்களை எதிர்ப்பவர்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க டேரியஸ் உத்தரவிட்டார். இரண்டாவது பாரசீக போர்த் தொடர் கி.மு. 490 இல், டாடிஸ் மற்றும் ஆர்டபெர்னெஸ் ஆகியோரின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போர்ப் பயணம் முதலில் நக்சஸ் தீவின் மீது மேற்கொள்ளப்பட்டு தீவைக் கைப்பற்றி எரித்தனர். பின்னர் அது மற்ற சைக்லேட்ஸ் தீவுகளுக்கு இடையில் பாய்ந்து, ஒவ்வொன்றையும் பாரசீகப் பேரரசுடன் இணைத்தது. பின்னர் படைகள் கிரேக்கத்தை வந்தடைந்தன. படைகள் எரீத்திரியாவில் தரையிறங்கி அதை முற்றுகையிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு, கைப்பற்றப்பட்டது. எரீத்திரியா அழிக்கப்பட்டது மேலும் அதன் குடிமக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். இறுதியாக, செயல் படைப்பிரிவு அட்டிகாவுக்குச் சென்றது, ஏதென்சுக்குச் செல்லும் வழியில் மாரத்தானில் தரை இறங்கியது. அங்கு, எண்ணிக்கையில் சிறிய ஏதெனியன் இராணுவம் பாரசீகப் படைகளை எதிர்கொண்டது. இருப்பினும் மராத்தான் போரில் ஏதெனிய இராணுவம் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது. இந்தத் தோல்வி போர்த் தொடரின் வெற்றி என்ற நோக்கத்தைத் தடுத்தது. மேலும் செயல் படைப்பிரிவு ஆசியாவிற்குத் திரும்பியது. ஆயினும்கூட, இந்த பயணம் அதன் பெரும்பாலான நோக்கங்களை நிறைவேற்றியது. நக்சோஸ் மற்றும் எரீத்திரியாவை தண்டித்தது. மேலும் ஏஜியன் பகுதியின் பெரும்பகுதியை பாரசீக ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் அதில் மக்கெடேனியாவை முழுமையாக உள்ளடக்கியதாக இருந்தது. இந்த போர்த் தொடரின் நிறைவடையாத பணியால், கிரேக்கத்தின் மீது மீண்டும் மிகப் பெரிய படையெடுப்புக்கு பாரசீகம் தயாராகியது. அடுத்த போரில் கிரேக்கத்தை உறுதியாகக் கீழ்ப்படுத்தவும், ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டாவைத் தண்டிக்கவும் டேரியஸை உறுதிகொள்ள வைத்தது. இருப்பினும், பேரரசிற்குள் ஏற்பட்ட உள் சண்டைகள் இந்த போர்ப் பயணத்தை தாமதப்படுத்தியது. மேலும் டேரியஸ் மூப்பினால் இறந்தார். கி.மு. 480 இல் தொடங்கி கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு அவரது மகன் முதலாம் செகர்ஸ் வசம் வந்தது. இதனையும் காண்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia