தேனி. மு. சுப்பிரமணி
தேனி. மு. சுப்பிரமணி (Theni M. Subramani) தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரத்தைச் சேர்ந்த ஓர் தமிழ் எழுத்தாளராவார்.[2] எம் சுப்பிரமணி என்ற இயற்பெயரிலும் முத்துக்கமலம், தாமரைச்செல்வி என்ற புனைப்பெயர்களிலும் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் துணுக்குகள் (குறுந்தகவல்கள்) மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை எழுதிவருகிறார்.[3] கட்டுரைகள், பேட்டிக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது படைப்புகள் பல இதழ்களிலும் இணையத்திலும் வெளியாகி உள்ளன. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டிற்கான கணினியியலில் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது.[4] வாழ்க்கைக் குறிப்புதேனி. மு. சுப்பிரமணி 1967 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் முத்துசாமிப்பிள்ளை கமலம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தேனி மாவட்டத்திலுள்ள பழனியப்பா வித்தியாலயம் பள்ளியில் தனது ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியையும், பழனியப்பா உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புக் கல்வியையும் படித்த இவர் தொடர்ந்து தூத்துக்குடி நகரத்திலுள்ள எசு. ஏ. வி. மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியையும் முடித்தார். தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் மின்சாரப் பணியாளர் சான்றிதழ் பயிற்சி பெற்ற இவர் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு சிமெண்ட் கழக ஆலையில் ஒரு ஆண்டு காலம் மின்சாரப் பணியாளருக்கான தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்றார். பல்வேறு தனியார் நூற்பாலைகளில் மின்சாரப் பணியாளராகப் பணியாற்றிக் கொண்டே மின்சாரப் பணி மேற்பார்வையாளருக்கான தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதி மின்சாரப் பணி மேற்பார்வையாளராகப் பணி உயர்வும் பெற்றார். தொலைநிலைக் கல்வி முறையில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்புத் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும், தொழிலாளர் நலம் மற்றும் நிர்வாகச் சட்டத்தில் பட்டயமும் பெற்றிருக்கிறார். எழுத்துலகம்1983 ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பத்திரிகைகளில் துணுக்குகள் எழுதத் தொடங்கி, இன்று வரை பல்வேறு பத்திரிகைகளில் நான்காயிரத்திற்கும் அதிகமான துணுக்குகள், ஆறுநூறுக்கும் மேற்பட்ட பொதுக் கட்டுரைகள், நூற்றுக்கு மேற்பட்ட கணினி தொடர்பான கட்டுரைகள், சில நேர்காணல்கள், 22 சிறுகதைகள், 260 புதுக்கவிதைகள் என்று தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் முத்துக்கமலம் என்ற இணைய இதழைத் தொடங்கிப் பராமரித்து வருகிறார்.[5] தற்போது இவ்விதழ் ஒரு பன்னாட்டுத் தமிழ் இணைய இதழாகவும் (ISSN: 2454 - 1990), இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் (UGC (India) Approved List of Journal (No:64227) in Tamil) ஒன்றாகவும் கருதுமளவுக்கு உயர்ந்துள்ளது. வெளியிடப்பட்ட நூல்கள்
பிற சிறப்புகள்வகிக்கும் பதவிகள்
வகித்த பதவிகள்
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia