பழனிசெட்டிபட்டிபழனிசெட்டிபட்டி (ஆங்கிலம்:Palani Chettipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், தேனி வட்டம், தேனி நகரத்திலிருந்து 4.5 கி.மீ. தொலைவில், தேனி - கம்பம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் முல்லை ஆறும், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் கொட்டக்குடி ஆறும் இருக்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 14,879 மக்கள்தொகையும்,[1] 4 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 6 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2] பழனிசெட்டிபட்டி அணைபார்க்க முதன்மைக் கட்டுரை: பழனிசெட்டிபட்டி அணை பழனிசெட்டிபட்டியின் கிழக்குப் பகுதியில் முல்லைப் பெரியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்காக, இந்த ஊரின் நிறுவனர் என அழைக்கப் பெறும் பழனியப்ப செட்டியார் என்பவரால் அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மேற்பகுதியில் பழனிசெட்டிபட்டி பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைக் கொண்டு செல்வதற்கான வாய்க்கால் ஒன்றும், சில உள்ளாட்சி அமைப்புகளுக்கான குடிநீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேல்நிலைப் பள்ளிகள்
தொடக்கப் பள்ளிகள்
கோயில்கள்
அரசு நிறுவனங்கள்
வங்கிகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia