தேரழுந்தூர்
தேரழுந்தூர் அல்லது திருவழுந்தூர் (Therizhandur) என்பது தமிழ்நாட்டின் சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் வட்டம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இது தேரழுந்தூர் ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது. பெயராய்வுசங்க காலத்திலிருந்து அழுந்தூர் என்று என்று அறியப்பட்ட இந்த ஊர் பாடல் பெற்ற தலமானதால் திரு என்ற முன்னொட்டுச் சேர்த்து திருவழுந்தூர் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. திருவழுந்தூர் என்பது பின்னர் தேரழுந்தூர் என்று மருவியது. அமைவிடம்இந்த ஊர் மயிலாடுதுறைக்கு தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர் தொடருந்து நிலையத்தில் இறங்கி தெற்கே 4 கி.மீ. தொலைவில் இந்த ஊர் உள்ளது. இவ்வூர் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி யையும், பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) யையும் சேர்ந்தது. தேரழுந்தூர் மேலையூர், கீழையூர், தொழுதாலங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். சுமார் 9533 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும். இதன் எல்லையாக கிழக்கில் அசிக்காடும், மேற்கில் திருவாவடுதுறையும், வடக்கில் குத்தாலமும் தெற்கில் கோமலும் அமைந்து உள்ளது. ஊர் சிறப்புதேரழுந்தூர் சங்ககாலத்தில் அழுந்தூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. புலவர் பரணர் இதனைத் தம் பாடலில் (அகநானூறு 245) குறிப்பிட்டுள்ளார். வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் கரிகாலனை 11 வேளிர் ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்களத்தில் அவர்களது முரசங்கள் மட்டுமே எஞ்சிக் கிடந்தன. இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.[2] இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம். கம்பராமாயணம் பாடிய கம்பர் அழுந்தூரில் பிறந்தவர்.[3] இவ்வூரில் திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில் எனும் வைணவக் கோயிலும், தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில் எனும் சிவன் கோயிலும் உள்ளது. கம்பர் இவ்வூரில் பிறந்ததற்கு ஆதராமாக உள்ள கம்பர் மேடு எனும் பகுதி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4][5][6][7] திருநாவுக்கரசர் இந்தத் திருவழுந்தூர்க் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia