தேவா, இந்தியா
தேவா (Dewa) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும் பேரூராட்சியுமாகும். இது ஹாஜி வாரிஸ் அலி ஷாவின் சன்னதிக்கு பிரபலமானது. இந்த நகரம் தேவா ஷெரீப் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இது தலைநகர் இலக்னோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மொழியியல் சிறுபான்மை மக்கள்தொகை கொண்ட ஒரு நகரமாக தேவாவை மாநில அரசு முறையாக அங்கீகரிக்கிறது. அங்கு உருது மொழி பேசுபவர்கள் உள்ளூர் மக்களில் 15 சதவீதமோ அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். இது உத்தரப் பிரதேசத்தின் முக்கியப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது [3] நிலவியல்தேவா 27°02′N 81°10′E / 27.03°N 81.17°Eபாகையில் அமைந்துள்ளது.[4] இது சராசரியாக 137 மீட்டர் (449 அடி) உயரத்தில் உள்ளது. மக்கள் தொகை பரவல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவாவின் மொத்த மக்கள் தொகை 15,662 ஆகும். இதில் 8,231 ஆண்களும் 7,431 பெண்களும் இருக்கின்றனர். 0 முதல் 6 வயதுக்குட்பட்டவர்கள் 2,347 என்ற அளவில் இருக்கின்றனர். தேவாவில் மொத்த கல்வியறிவாளர்களின் எண்ணிக்கை 7,967 ஆகும். இது 50.9% மக்களில் ஆண்களின் கல்வியறிவு 54.4% ஆகவும், பெண் கல்வியறிவு 47.0% ஆகவும் உள்ளது. தேவாவின் 7+ மக்கள்தொகையின் கல்வியறிவு விகிதம் 59.8% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 63.9% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 55.4% ஆகவும் இருந்தது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை முறையே 746 , 18 ஆகும். தேவாவில் 2011இல் 2485 வீடுகள் இருந்தன.[1] தேவாவில் 67 கிராம ஊராட்சிகள் உள்ளன.[5] சாலை இணைப்புதேவா, இலக்னோ, பதேபூர், பாராபங்கி, சூரத்கஞ்ச், குர்சி, மசாலி , சின்ஹாட் ஆகியவற்றுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia