தொலைக்காட்சி தொகுப்பாளர்தொலைக்காட்சி தொகுப்பாளர் (Television presenter) என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபரை குறிக்கின்றது. தற்காலத்தில் பிற துறைகளில் உள்ள நபர்கள் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது பொதுவானதாக மாறியுள்ளது.[1][2] இந்த துறையில் நடிகர், வடிவழகர், பாடகர், நகைச்சுவை நடிகர் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். விஞ்ஞானிகள் அல்லது அரசியல்வாதிகள் போன்றவர்களும் தொகுப்பளராக உள்ளார்கள். சிவகார்த்திகேயன்,[3] மா கா பா ஆனந்த்,[4] சித்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற தொகுப்பாளர்கள் சிலர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தங்களை பிரபலப்படுத்திய பின்னர் திரைப்படத்துறை அல்லது தொலைக்காட்சித் துறைகளில் நடிகர்களாக பிரபலமாகி உள்ளனர். சூர்யா,[5], கமல்ஹாசன்,[6] சினேகா,[7] ராதிகா சரத்குமார்,[8] சிம்ரன், பிரசன்னா, குஷ்பூ, விஜய் சேதுபதி போன்ற பிரபல நடிகர்களும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளனர். தொகுப்பாளர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia