1870-இல் தோல்பூர் மன்னர் பகவந் சிங்
தோல்பூர் கேசர்பாக் அரண்மனை, தற்போது தோல்பூர் இராணுவப் பொதுப் பள்ளியாக உள்ளது.
தோல்பூர் சமஸ்தானம் அல்லது தோல்பூர் இராச்சியம் (Dhaulpur State or Kingdom of Dholpur ) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தோல்பூர் மாவட்டத்தின் 3038 சதுர மைல் பரப்பளவும், ஆண்டு வருவாய் ரூபாய் 9,60,000 கொண்டிருந்தது.[ 1] தோல்பூர் இராச்சியத்தை 1806-இல் நிறுவியவர் ஜாட் இன மன்னர் கிராத் சிங் ஆவார்.[ 2] [ 3] [ 4] [ 5] [ 6] 1817 வரை முடியாட்சியாக விளங்கிய தோல்பூர் இராச்சியம் 1818-இல் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது . இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். இந்திய விடுதலையின் போது 1947 முதல் 1949 வரை இந்த சமஸ்தானம் அரசியல்சட்ட முடியாட்சியாக இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று தோல்பூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[ 7]
வரலாறு
15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்கு முன்னர், பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் மட்டும் 565 சமஸ்தானங்கள் (Princely state ) இருந்தது.[ 8] [ 9] [ 10] இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. [ 11] [ 12] [ 13] இந்தியா -பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், 1949ஆம் ஆண்டுக்குள், சிக்கிம் தவிர்ந்த ஏனைய மன்னராட்சி அரசுகள் (சுதேச சமஸ்தானங்கள் ) இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ அல்லது வேறொரு நாட்டுடனோ இணைந்தன. சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்:[ 14] இவற்றில் மைசூர் அரசு , ஐதராபாத் நிசாம் , பரோடா அரசு , திருவாங்கூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மட்டுமே பெரிய நிலப்பகுதிகள் கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் பெரும்பாலன சுதேச சமஸ்தானங்கள் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று விடுதலை இந்தியாவுடன் இணைந்து விட்டன. ஐதராபாத் மற்றும் ஜுனாகத் அரசு போன்ற சமஸ்தானங்களுக்கு எதிராக போரிட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இராச்சியம் செப்டம்பர் 1947-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Pochhammer, Wilhelm von India's Road to Nationhood: A Political History of the Subcontinent (1973) ch 57 excerpt
Copland, Ian (2002), Princes of India in the Endgame of Empire, 1917-1947 , (Cambridge Studies in Indian History & Society). Cambridge and London: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் . Pp. 316, ISBN 0521894360 .
Harrington, Jack (2010), Sir John Malcolm and the Creation of British India, Chs. 4 & 5. , New York: Palgrave Macmillan ., ISBN 978-0-230-10885-1
Imperial Gazetteer of India vol. II (1908), The Indian Empire, Historical , Published under the authority of His Majesty's Secretary of State for India in Council , Oxford at the Clarendon Press. Pp. xxxv, 1 map, 573.
Imperial Gazetteer of India vol. III (1907), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502 , Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxxvi, 1 map, 520.
Imperial Gazetteer of India vol. IV (1907), The Indian Empire, Administrative , Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552.
Ramusack, Barbara (2004), The Indian Princes and their States (The New Cambridge History of India) , Cambridge and London: Cambridge University Press. Pp. 324, ISBN 0521039894
வெளி இணைப்புகள்