தோவாளை மாணிக்க மாலைதோவாளை மாணிக்க மாலை (Thovalai Manikka Malai) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைப் பகுதிகளில் கோவில் வழிபாடுகளுக்காக மலர்களால் தயாரிக்கப்படும் ஒரு மாலை வகையாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் திருவிழாக்களுக்காத் தயாரிக்கப்படும் இம்மாலை தற்பொழுது இந்திய புவிசார் குறியீடு தகுதியினைப் பெற்றுள்ளது. விளக்கம்தோவாளை மாணிக்க மாலை பாரம்பரியமாக சிவப்பு, வெள்ளை அரளிப் பூக்களை சம்பா நார் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சம்பா நார் என்பது இப்பகுதி நீர்நிலைகளில் காணப்படும் நீண்ட புல் வகையாகும். மாலையின் பின்னணியில் காணப்படும் பச்சை பகுதி பொதுவாக நொச்சி இலைகளால் செய்யப்படுகிறது.[1] கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமசுதானத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் திருவிதாங்கூரில் நடைபெறும் கோவில், அரச விழாக்களுக்கு தோவாளையிலிருந்து பூக்கள் கட்டப்பட்டு மாலைகளாக அனுப்பப்பட்டன. இந்த மாலைகல் கட்டப்பட்ட விதத்தில் மாணிக்கம் பதித்தது போல இருந்ததால் இது மாணிக்க மாலை எனப் பெயர் பெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் வரை இந்த மாலையினைத் தொடுக்க ஆகும் காலம். தற்பொழுது சிறப்பு நிகழ்வுகளிலும் இம்மாலைகள் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.[2] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia