த சீக்ரெட் (2006 திரைப்படம்)

த சீக்ரெட்
DVD cover
இயக்கம்ட்ரூ ஹெரியட்
தயாரிப்புபால் ஹாரிங்ட்டன்
ரொண்டா பிர்ன்
கதைரொண்டா பிர்ன்
ஒளிப்பதிவுஜான் ஹால்<br /நோயல் ஜோன்ஸ்
மேட் கூப்மென்ஸ்
படத்தொகுப்புடாமியன் கார்பே
டானியல் கெர்
விநியோகம்பிரைம் டைம் புரொடக்சன்ஸ்
வெளியீடுமார்ச் 23, 2006 (2006-03-23)
ஓட்டம்91 நிமிடங்கள்
நாடுஆத்திரேலியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$3.5 மில்லியன்[1]
மொத்த வருவாய்$65.6 மில்லியன்[2]

தி சீக்ரெட் (The Secret) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான ஆஸ்திரேலிய-அமெரிக்க ஆன்மீக ஆவணப்படமாகும். ஒரு முடிவை நம்புவதன் மூலமும், அதைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திப்பதன் மூலமும், விரும்பிய முடிவை "ஈர்க்க" நேர்மறையான உணர்ச்சி நிலைகளைப் பராமரிப்பதன் மூலமும் ஒருவர் விரும்பும் அல்லது தேவைப்படும் அனைத்தையும் திருப்திப்படுத்த முடியும் என்ற புதிய சிந்தனை "ஈர்ப்பு விதி"யை நிரூபிக்க வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான நேர்காணல்களைக் கொண்டது.

இத்திரைப்படத்தினைத் தொடர்ந்து த சீக்ரெட் என்ற இதே பெயரில் புத்தகமும் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் ஓப்ரா வின்ஃப்ரே, எல்லேன் டிஜெனிரெஸ் மற்றும் லாரி கிங் போன்ற ஊடக பிரபலங்களின் ஆர்வத்தை ஈர்த்து, முன்னணி பத்திரிகைகளில் இருந்து விமர்சனங்களையும் பெற்றது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய புதிய சிந்தனை இயக்கத்தை தி சீக்ரெட்டின் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களுக்கான வரலாற்று அடிப்படையாக மேற்கோள் காட்டுகிறார்கள்.[3]

வாலஸ் வாட்டில்ஸ் எழுதிய "தி சயின்ஸ் ஆஃப் கெட்டிங் ரிச்" என்ற புதிய சிந்தனை புத்தகத்தை ரோண்டா பைர்ன் படத்திற்கான உத்வேகமாகக் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னதாக ஏராளமான புதிய சிந்தனை புத்தகங்கள் வெளிவந்தன. இதில் 1906 ஆம் ஆண்டு புதிய சிந்தனை பத்திரிகையின் ஆசிரியரான வில்லியம் வாக்கர் அட்கின்சன் எழுதிய தாட் வைப்ரேஷன் ஆர் தி லா ஆஃப் அட்ராக்சன் இன் தி தாட் வேர்ல்ட் என்ற புத்தகமும் அடங்கும்.[4] பைர்ன் படித்ததாகக் கூறப்படும் பிற புதிய சிந்தனைப் புத்தகங்களில் பிரெண்டிஸ் மல்ஃபோர்டின் 19 ஆம் நூற்றாண்டின் தாட்ஸ் ஆர் திங்ஸ் போன்ற நூல்களும் மற்றும் 1926 ஆம் ஆண்டு ராபர்ட் கோலியரின் சீக்ரெட் ஆஃப் தி ஏஜஸ் ஆகியவை அடங்கும்.[5]

தயாரிப்பு

தி சீக்ரெட் ஆத்திரேலியாவின் மெல்பேர்னைச் சேர்ந்த பிரைம் டைம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தால் நிர்வாக தயாரிப்பாளர் ரோண்டா பைர்ன், தயாரிப்பாளர் பால் ஹாரிங்டன் மற்றும் இயக்குனர் ட்ரூ ஹெரியட் ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டது. மெல்பேர்னின் கோசர் மீடியா நிறுவனம் திரைப்படம் மற்றும் புத்தகத்தின் காட்சித் தொடர்பான தொனி மற்றும் உணர்வுக்கான பொறுப்பை ஏற்றது.[6][7][8] பைரனின் ஒரு அங்கேரிய நிறுவனமான டி.எஸ். புரொடக்சன்ஸ் எல்.எல்.சி (TS Production LLC), திரைப்படம் மற்றும் புத்தகத்தின் சந்தையிடுதல் மற்றும் விநியோகத்தைக் கவனித்துக் கொண்டது.

வரவேற்பு

2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மதிப்பிடப்பட்ட உள்நாட்டு டிவிடி விற்பனை $56 மில்லியனைத் தாண்டியது. இறுதியில் $65 மில்லியனைத் தாண்டியது.[9]

விமர்சனம்

தி சீக்ரெட் ஒரு "சுய உதவித் தோற்றப்பாடாக",[10] ஒரு "வெளியிடப்படும் தோற்றப்பாடாக",[11] மற்றும் ஒரு "கலாசாரத் தோற்றப்பாடாக" என்று விவரிக்கப்பட்டது.[12] [13] மிகவும் பொதுவான சுய-உதவி தோற்றப்பாட்டுக்கு ஒத்திருப்பதாக, த சீக்ரெட் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுதப்பட்டன.

மேற்கோள்கள்

  1. "budget". The numbers. Retrieved 29 July 2013.
  2. "Gross". The numbers. Retrieved 29 July 2013.
  3. della Cava, Marco R. (29 March 2006). "Secret history of 'The Secret' ". USA Today. https://www.usatoday.com/life/books/news/2007-03-28-the-secret-churches_N.htm. 
  4. Atkinson, William Walker (1906). Thought Vibration or the Law of Attraction in the Thought World. Cornerstone. ISBN 978-1564596604. (Out of copyright, published on the Internet பரணிடப்பட்டது 5 சூன் 2007 at the வந்தவழி இயந்திரம்)
  5. Salkin, Allen (25 February 2007). "Shaking Riches Out of the Cosmos". The New York Times. https://www.nytimes.com/2007/02/25/fashion/25attraction.html?ex=1330059600&en=81538d3b85977700&ei=5088&partner=rssnyt&emc=rss. 
  6. "The Secret Press Release". TS Production LLC. 2006 இம் மூலத்தில் இருந்து 21 April 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070421201643/http://thesecret.tv/ts_presskit.pdf. 
  7. "Gozer Media visual effects & graphic design". Retrieved 5 May 2007. Gozer worked closely with the producers ... to develop the visual style of the show. We supplied all visual effects and other graphical components for the show and its subsidiaries. — navigate web: motion > The Secret
  8. Byrne, Rhonda (2006) [2006]. "Acknowledgments". The Secret. Hillsboro, OR: Beyond Words. p. xiv. ISBN 978-1582701707. Goze Media, for the creation of the superb graphics and for impregnating them with the feeling of The Secret.
  9. "The Secret (2006) – Financial Information". The Numbers. Retrieved 18 February 2019.
  10. Dundzila, Reverend Vilius (10 April 2007). "Not sold on The Secret". The Advocate இம் மூலத்தில் இருந்து 27 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927194436/http://www.advocate.com/print_article_ektid44343.asp. 
  11. Lampman, Jane (28 March 2007). " 'The Secret,' a phenomenon, is no mystery to many ". http://www.csmonitor.com/2007/0328/p13s01-lire.html. 
  12. Klein, Karin (13 February 2007). "Self-help gone nutty". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 21 February 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070221030456/http://www.latimes.com/news/opinion/la-oe-klein13feb13,0,3953992.story?coll=la-opinion-rightrail. 
  13. Dawes, David F. (3 May 2007). "Pop culture's best-kept Secret" இம் மூலத்தில் இருந்து 12 May 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070512210547/http://www.canadianchristianity.com/nationalupdates/070503secret.html#articletop. 

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya