த டா வின்சி கோட் (திரைப்படம்)
த டா வின்சி கோட் ஒரு புத்தகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்ட திரைப்படம் ஆகும். இதில் நாயகனாக டாம் ஹாங் நடித்திருந்தார். இத் திரைப்படம் உலகளவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது காரணம் இதில் யேசு நாதருக்கு சந்ததி இருந்ததாக கூறப்பட்டமையே ஆகும். கதை அமைப்புகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. டாம் ஹாங் குறியியல் (Symbols) பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு அமெரிக்கப் பேராசிரியர். பாரிசுக்கு ஒரு விரிவுரை நிகழ்த்த வந்த இடத்தில் விதி விளையாட ஆரம்பிக்கின்றது. பாரிஸ் அருங்காட்சியத்தில் நூதனப் பொருட்களின் காப்பாளராக பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்படுகின்றார். இறந்த நூதனசாலை பணியாளர் தன் நெஞ்சில் நட்சத்திரக்குறி போன்ற தடயங்களை கீறி விட்டு மரணித்து விடுகின்றார். பாரீஸ் காவல் துறை டாம் ஹாங்கின் உதவியை நாடுகின்றது. பின்பு இறந்தவரின் பேத்தியுடன் சேர்ந்துகொள்ளும் டாம் ஹாங் பல புதிர்களை ஒன்றின் பின் ஒன்றாக விலக்குகின்றார். இதே வேளையில் காவல்துறையின் சந்தேகம் டாம் ஹாங்கின் பக்கம் திரும்புகின்றது. இப்படியாக கதை நகர்கின்றபோது இயேசு நாதருக்கு சந்ததி உள்ளமை தெரிய வருகின்றது. இதற்கிடையில் இயேசு பிரானின் சந்ததி பற்றிய ஆதாரங்களை அழிக்க ஒரு குழுவும், இரகசியமாகப் பாதுகாக்க இன்னுமொரு குழுவும் அலைந்து திரிகின்றது. இதில் முன்னைய குழுவால் டாம் ஹாங்கும் நாயகியும் துரத்தப்படுகின்றனர். நம்பிக்கை, நம்பிக்கைத் துரோகம் என்று கதை விறு விறுப்பாக நீள்கின்றது வரலாற்றை இணைத்துள்ள விதம்ஒவ்வொரு கட்டத்திலும் பல வரலாற்று உண்மைகளை கதையுடன் இணைத்துள்ளவிதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக டா வின்சியின் இறுதி இராப்போசனம் சித்திரத்தில் செய்யப்படும் வெட்டுக் கொத்து வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia