த ஹார்பர் விடுதியும் வதிவிடமும்
த ஹாபர் விடுதியும் வதிவிடமும் இடப்பக்கத்தில் காணப்படுகின்றது. 20 டிசம்பர் 2007
த ஹாபர் விடுதியும் வதிவிடமும் என்பது 256 மீட்டர்கள் (840 அடி) உயரமும் 59 தளங்களையும் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இது 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. வதிவிடங்களையும் விடுதியையும் கொண்ட இக் கட்டிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், துபாய் மரீனா என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இக் கட்டிடத்தில் 261 வதிவிட அலகுகள் உள்ளன. இவற்றுள், 24 பெரிய தனி அறைகளும், 6 ஒரு படுக்கையறை கொண்ட அலகுகளும், 170 இரண்டு படுக்கையறை அலகுகளும், 55 மூன்று படுக்கையறை அலகுகளும் அடங்கும். இது, எமிரேட்ஸ் ஹொட்டேல்ஸ் அண்ட் ரெசிடென்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தொகுதி.
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia