நகர மண்டபம் ரயில் நிலையம்
கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதிமூன்றாவது தொடருந்துநிலையமாகும்.அதில் இது ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் மற்றும் பூகிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. நான்கு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. மற்ற இரண்டு தளமேடைகளில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia