நகாமோ மாவட்டம்
நகாமோ மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது அசாமில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் ஆகும். [1] இதன் தலைமையகம் நகோன்வில் உள்ளது. இந்த மாவட்டம் 3831 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [2] காசிரங்கா தேசியப் பூங்காவின் சில பகுதிகள், இந்த மாவட்டத்தின் வரையறைக்குள் வருகின்றன. பொருளாதாரம்இங்கு நெல் பயிரிடுகின்றனர். உழவுத் தொழிலே முதன்மையானது. இங்கு நெசவு ஆலைகளும், தேயிலை, சணல் தொழிற்சாலைகளும் உள்ளன. மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 2,826,006 மக்கள் வாழ்கின்றனர். [1] சதுர கிலோமீட்டருக்குள் 711 பேர் வசிக்கின்றனர். [1] பால் விகிதத்தில், ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 962 பெண்கள் உள்ளனர். [1] இங்கு வசிக்கும் மக்களில் 74% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1] இங்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் இந்துக்களும் வாழ்கின்றனர். இங்கு அசாமிய மொழி, வங்காளம், இந்தி, போடோ, கர்பி, திமாசா, மணிப்பூரி ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அசாமிய மொழியை பொது மொழியாகப் பயன்படுத்துகின்றனர். சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia